• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    பாதுகாப்பில் கிரெட்டாவுக்கே டஃப் கொடுக்கும் பேயான்... BNCAP-ல் 5-ஸ்டார் ரேட்டிங் வாங்குமா?!

    இந்தியாவில் ஹூண்டாயின் மற்ற மாடல்களை விட அதிநவீன 'லெவல் 2+ ADAS' தொழில்நுட்பத்தை பேயான் கார் முதன்முறையாக அறிமுகப்படுத்துகிறது.

    ved
    ved
    modified on அக்டோபர் 22, 2026 17:35 ist
    info icon
    published onOct 22, 2026 17:29 IST
    last updated onOct 22, 2026 17:35 IST
    31 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Hyundai Bayon Safety Features

    ஹூண்டாய் நிறுவனம் அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ள தனது புதிய பேயான் SUV காரில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. கிரெட்டா மற்றும் வென்யூ கார்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்படும் இந்த கார் காம்பேக்ட் SUV பிரிவில் ஹூண்டாயின் இரண்டாவது மாடலாக களமிறங்குகிறது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் இன்று வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் பேயான் காரில் எதிர்பார்க்கப்படும் பிற அம்சங்கள் பற்றிய விரிவான பார்வையை இங்கு பார்க்கலாம்:

    ஹூண்டாய் பேயான்: பாதுகாப்பு அம்சங்கள் விவரம்

    ஹூண்டாயின் சமீபத்திய அறிவிப்பின்படி, பேயான் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் பின்வரும் பாதுகாப்பு அம்சங்கள் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன:

    • ரோல்ஓவர் மிட்டிகேஷன் (Rollover Mitigation)

    • டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS)

    • 6 ஏர்பேக்குகள்

    • ஹில் ஹோல்டு அசிஸ்ட் (HHC)

    • எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல் (ESS)

    • ஃபாலோ மீ ஹோம் ஹெட்லேம்ப்கள்

    • எலக்ட்ரானிக் ஸ்டாபிலிட்டி கன்ட்ரோல் (ESC)

    • ரியர் பார்க்கிங் சென்சார்கள்

    • அனைத்து பயணிகளுக்கும் ரிமைண்டருடன் கூடிய 3-பாயிண்ட் சீட்பெல்ட்கள்

    • ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள்

    டாப் வேரியண்ட்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கூடுதலான அட்வான்ஸ்டு பாதுகாப்பு வசதிகள் கிடைக்கின்றன:

    • 3 ரேடார்கள் மற்றும் 23 ஃபங்ஷன்களை உள்ளடக்கிய லெவல் 2+ ADAS

    • பிளைண்ட் வியூ மானிட்டருடன் கூடிய 360 டிகிரி கேமரா

    • ஆட்டோ ஹோல்டு வசதியுடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB)

    • பிரண்ட் மற்றும் சைடு பார்க்கிங் சென்சார்கள்

    • அனைத்து சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக்குகள்

    • ஹை பீம் அசிஸ்ட் (HBA)

    BNCAP பாதுகாப்பு ரேட்டிங்:

    மிகச்சிறந்த ஸ்ட்ரக்சரல் பாடி உருவாக்கத்திற்காக இதில் அல்ட்ரா ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீல் (UHSS) பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் BNCAP மோதல் சோதனைகளில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெறும் வகையில் பேயான் காரை இன்ஜினியரிங் செய்துள்ளதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

    ஹூண்டாய் பேயான் பற்றி...

    காம்பேக்ட் SUV பிரிவில் ஹூண்டாய் கிரெட்டா தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் இதன் அடுத்த தலைமுறை மாடல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஹூண்டாய் இந்த பிரிவில் சற்று வித்தியாசமான டிசைன் அமைப்பில் பேயோனை தனது இரண்டாவது மாடலாக களமிறக்குகிறது. இதன் டிசைன் விவரங்கள் சில நாட்களுக்கு முன்பே வெளியான நிலையில், இது ஒரு க்ராஸ்ஓவர் போன்ற தோற்றத்தையும், சர்வதேச அளவில் விற்பனையாகும் ஹூண்டாய் மாடல்களின் டிசைன் பாணியையும் கொண்டுள்ளது.

    Hyundai Bayon

    காரின் உட்புறத்தில், கர்வ்டு டியூவல் ஸ்கிரீன் செட்டப், வென்யூ மற்றும் வெர்னா கார்களில் இருப்பது போன்ற புதிய நாலு ஸ்போக் ‘மார்ஸ் கோட்’ லோகோ ஸ்டீயரிங் வீல் மற்றும் டியூவல் டோன் பிளாக் அண்ட் வொயிட் கேபின் தீம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. டேஷ்போர்டின் கீழ் பகுதியில் சென்ட்ரல் AC வென்ட்களும், அதன் நடுவே கிளைமேட் கன்ட்ரோல் பட்டன்களும் வித்தியாசமான தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

    Hyundai Bayon

    அம்சங்களை பொறுத்தவரை இந்த SUV மிகவும் சிறப்பானதாக இருக்கும். இதில் பானரோமிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.3 இன்ச் டச்ப்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, போஸ் பிரிமியம் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் போன் சார்ஜர், பவர் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், வென்டிலேட்டட் பிரண்ட் சீட்கள் மற்றும் கனெக்டெட் கார் தொழில்நுட்பம் போன்ற நவீன வசதிகள் நிறைந்துள்ளன.

    பவர்டிரெயின்

    ஏற்கனவே கிரெட்டா மற்றும் வெர்னா கார்களில் பயன்படுத்தப்படும் அதே 1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் பேயான் காரிலும் வழங்கப்படுகிறது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் இணைந்து செயல்படும். இதோ அதன் முழுமையான விவரக்குறிப்புகள்:

    எஞ்சின்

    1.5 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல்

    பவர்

    115 PS

    டார்க்

    144 Nm

    டிரான்ஸ்மிஷன்

    6-speed MT/CVT

    டிரைவ்ட்ரெய்ன்

    FWD

    MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், CVT- கன்டினியூவஸ்லி வேரியபிள் டிரான்ஸ்மிஷன் (ஆட்டோமேட்டிக்), FWD- பிரண்ட் வீல் டிரைவ்

    அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

    ஹூண்டாய் பேயான் வரும் அக்டோபர் 26 அன்று அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகமாகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.17.5 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

    இந்திய சந்தையில் ஹூண்டாய் பேயான் கார், ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ரெனால்ட் டஸ்டர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மாருதி விக்டோரிஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், நிஸான் டெக்டான், டாடா சியர்ரா, சிட்ரோன் ஏர்கிராஸ் X, ஹோண்டா எலிவேட் மற்றும் MG ஆஸ்டர் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக அமையும்.

    கார்தேக்கோவின் கருத்து...

    சமீபகாலமாக கார்களின் பாதுகாப்பிற்கு ஹூண்டாய் நிறுவனம் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. சமீபத்தில் வென்யூ கார் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று தனது பாதுகாப்பை நிரூபித்தது. அந்த வரிசையில், தற்போது பேயான் காரிலும் பல்வேறு செக்மென்ட் ஃபர்ஸ்ட் பாதுகாப்பு அம்சங்களை வழங்கி, குடும்ப வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பு விழிப்புணர்வு கொண்டவர்களையும் கவர ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் வெளியாகவுள்ள இதன் அதிகாரப்பூர்வ விலை எந்த அளவுக்கு போட்டித்தன்மையுடன் அமைந்து கிரெட்டாவின் வெற்றியை மீண்டும் மீண்டும் செய்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    புதிய பேயான் காரின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்!

    was this article helpful ?

    ved
    Ved Kulkarni is a Correspondent with CarDekho Group, and an automotive journalist with over 5 years of experience under his belt covering cars, motorcycles, mobility solutions and everything in between. A Product Design graduate, he specialises in analysing market trends, testing cars, creating automotive content and gathering customer insights. His love for vehicles began early, and he has vast hands-on experience with everything from classic cars to imported exotics and even the regular mass market vehicles. His technical expertise, combined with a deep-rooted passion for all things automotive, helps give buyers holistic and knowledgeable advice. மேலும் படிக்க

    Write your Comment on Hyundai bayon

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience