MG ஹெக்டர் டோமாஹாக் PHEV: புக்கிங் மற்றும் டெலிவரி விவரங்கள்
ஹெக்டர் டோமாஹாக் PHEV டெலிவரிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும். அதுவரை நீங்கள் காத்திருக்க வேண்டும்.
- ஒரு கருத்தை எழுதுக

MG மோட்டார் இந்தியா, தனது புதிய ஹெக்டர் டோமாஹாக் பிளக் -ன் ஹைப்ரிட் எலக்ட்ரிக் வாகனத்தை (PHEV) நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஆன்லைன் மற்றும் டீலர்ஷிப்கள் மூலம் முன்பதிவு செய்வதற்கான விவரங்களை பிராண்ட் உறுதி செய்துள்ளது. இதோ அந்த முழுமையான விவரங்கள்.
ஏழு இருக்கைகள் கொண்ட SUV-க்களின் வரிசையில் ஒரு ஹைப்ரிட் மாடலை வாங்க நீங்கள் விரும்பினால், 'ஹெக்டர் டொமாஹாக் PHEV' காரையும் ஒரு தேர்வாகக் கருத்தில் கொண்டிருக்கலாம். எனவே இந்த பிளக்-இன் ஹைப்ரிட் SUV-யை முன்பதிவு செய்யும் நடைமுறை குறித்து விரிவாகப் பார்ப்போம்.
உங்கள் ஹெக்டர் டோமாஹாக் PHEV-ஐ முன்பதிவு செய்வது எப்படி?
MG இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இது ஒரு சில நிமிடங்களில் முடிந்துவிடும் ஒரு எளிய செயல்முறையாகும்
-
MG Cars பிரிவின் கீழ் Hector Tomahawk PHEV மாடலைத் தேர்ந்தெடுக்கவும்.
-
உங்களுக்கு விருப்பமான வேரியன்ட் மற்றும் வெளிப்புற நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
-
உங்கள் SUV- யைபெற்றுக்கொள்ள அருகிலுள்ள அல்லது விருப்பமான ஷோரூமைத் தேர்ந்தெடுக்க MG நிறுவனம் உங்களைக் கேட்கும்.
-
முழுமையான பணம் செலுத்துதல் அல்லது கார் கடன் பெறுதல் போன்ற உங்களுக்கு விருப்பமான நிதி முறையைத் தேர்ந்தெடுக்கவும்.
-
நீங்கள் அளித்த தகவல்களைச் சரிபார்த்து, முன்பதிவைத் தொடரவும்.
உங்கள் முன்பதிவை உறுதிப்படுத்த முன்பதிவுக் கட்டணத்தை இணையம் வழியாகச் செலுத்தலாம்.
டீலர்ஷிப் புக்கிங்
-
உங்கள் அருகிலுள்ள MG ஷோரூமிற்குச் சென்றும் ஹேக்டர் டொமாஹாக் PHEV காரை முன்பதிவு செய்யலாம்.
-
ஷோரூமிற்குள் நுழைந்ததும் ஒரு விற்பனைப் பிரதிநிதி உங்களுக்காக நியமிக்கப்பட்டு அந்த காரைப் பற்றிய முழுமையான தகவல்களையும் சுற்றிக் காண்பித்து விளக்குவார்.
-
ஹேக்டர் டொமாஹாக் PHEV காரின் ஓட்டுநர் அனுபவத்தைப் பெற தேவைப்பட்டால் அதை ஓட்டிப் பார்த்தும் (சோதனை ஓட்டம்) சரிபார்க்கலாம்.
-
இந்த காரைப் பற்றி முழு மனநிறைவு அடைந்ததும் அடுத்தகட்ட முன்பதிவு நடைமுறைக்காக உங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிரவும்.
-
உங்களுக்கு விருப்பமான கார் வகை மற்றும் நிறத்தை இறுதி செய்யவும்.
-
உங்கள் புதிய மின்சார காரை உறுதிசெய்ய முன்பதிவுத் தொகையைச் செலுத்தவும்.
| கவனிக்கவும்: உங்கள் முன்பதிவை முடிப்பதற்கு முன் உங்கள் குடும்பத்தினரையும் ஷோரூமிற்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கிறோம். ஏனெனில் அவர்களும் காரில் நேரத்தை செலவிடுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறத்தைப் பொறுத்து காத்திருப்பு காலம் மாறுபடலாம் என்பதால் நீங்கள் தேர்ந்தெடுத்த டீலர்ஷிப் மூலம் ரத்துசெய்யும் கொள்கைகள் நிதி விருப்பங்கள் மற்றும் மதிப்பிடப்பட்ட டெலிவரி காலக்கெடுவைச் சரிபார்ப்பதும் அறிவுறுத்தப்படுகிறது. |
டெலிவரி டைம்லைன்
MG ஹெக்டர் டோமாஹாக் EV -க்கான விநியோகங்கள் இந்த மாதம் தொடங்கும். அதே வேளையில் MG ஹெக்டர் டோமாஹாக் PHEV-ஐ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனத்தை நவம்பர் 2026 முதல் பெறத் தொடங்குவார்கள். முன்பதிவுகளின் வரிசை மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து டெலிவரி தேதிகளில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். இதுகுறித்த விரிவான தகவல்களை டீலர்ஷிப்கள் வழங்கும்.
ஓவர்வியூ
இந்த கார் ஒரு விசாலமான ஏழு-சீட்டர் கேபினைக் கொண்டுள்ளது இது பெரிய குடும்பங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இதன் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று டேஷ்போர்டில் உள்ள பெரிய 15.6-இன்ச் போர்ட்ரெய்ட்-ஸ்டைல் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும். இது கனெக்டெட் கார் டெக்னாலஜி மற்றும் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது.

ஹேக்டர் டொமாஹாக் PHEV காரானது கருப்பு நிற கூரை கம்பிகள் மற்றும் பின்புறத்தில் உயர்ந்து செல்லும் குரோம் ஜன்னல் கோடுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறக் கண்ணாடிப் பகுதியில் வெள்ளி நிற அமைப்புகளும், கச்சிதமான காரின் நிறத்திலான கதவு பிடிகள், கருப்பு நிற சக்கர வளைவு மூடி, ஸ்டைலான 18-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் கூடுதல் SUV தோற்றத்திற்காக பக்கவாட்டு கதவு மூடிகள் ஆகியவையும் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் பின்புறம் அதன் மின்சார மாடலைப்போலவே முன்புற வடிவத்தை ஒத்த 'H' வடிவ பிளவுபட்ட LED விளக்குகளுடன் காட்சிளிக்கிறது. மேலும் மறைக்கப்பட்ட பின்புற துடைப்பான் மற்றும் வெள்ளி நிற அமைப்புகளுடன் கூடிய செதுக்கப்பட்ட பின்புற பம்பர் ஆகியவையும் இதில் இடம்பெற்றுள்ளன.


பாதுகாப்பிற்காக ஹெக்டர் டோமாஹாக் PHEV ஆனது Level-2 ADAS, 360-டிகிரி கேமரா, பல காட்சிகள், V2L, வாகனத்திலிருந்து வீட்டிற்கு (V2H) போன்ற தொழில்நுட்பத்துடன் ஏற்றப்பட்டுள்ளது. இது பிரிவில் முதலாவதாக உள்ளது. வாகனம் முதல் வாகனத்தை கட்டுப்படுத்தும் திறன் (ESC), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB), மழையை உணரும் வைப்பர்கள், தானியங்கி ஹெட்லேம்ப்கள் மற்றும் ISOFIX குழந்தை இருக்கை ஏற்றங்கள் ஆகியவையும் உள்ளன.
டிரைவ்டிரெய்ன்
ஹெக்டர் டோமாஹாக் PHEV-யின் இதயமாக இருப்பது அதன் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் தான். இதில் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் 20.5 kWh பேட்டரி பேக் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. இந்த பிளக்-இன் ஹைப்ரிட் சிஸ்டம் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் சிறந்த மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தேவைப்படும்போது முழு எலக்ட்ரிக் மோடிலும் பயணிக்க முடியும்.
விரிவான விவரங்கள் இங்கே:
| இன்ஜின் |
1.5-லி நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் |
| பேட்டரி பேக் |
20.5 kWh |
| பவர் (இன்ஜின் + மோட்டார்) |
102 PS + 201 PS |
| டார்க் (இன்ஜின் + மோட்டார்) |
125 Nm + 237 Nm |
| கிளைம்டு ரேஞ்ச் (ஒருங்கிணைந்த)^ |
1100 km |
| கிளைம்டு ரேஞ்ச் (EV மட்டும்)^ |
115 km |
| எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
1 |
| டிரான்ஸ்மிஷன் |
DHT |
DHT- டெடிகேட்டட் ஹைபிரிட் டிரான்ஸ்மிஷன், ^ MIDC பார்ட் 1 + பார்ட் 2 படி
விலை & போட்டியாளர்கள்
MG ஹெக்டர் டோமாஹாக் PHEV ரூ. 25.70 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற அறிமுக விலையில் களமிறக்கப்பட்டுள்ளது. இது மஹிந்திரா XUV 7XO, டாடா சஃபாரி மற்றும் ஹூண்டாய் அல்கஸார், கியா சோரென்டோ போன்ற பிரபலமான மூன்று-வரிசை SUV-களுக்குப் போட்டியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் வரும் ஒரே கார் இது என்பதால் இது ஒரு தனித்துவமான தேர்வாக அமைகிறது.
கார்தேக்கோ சொல்வது...
பெட்ரோல்/டீசல் இன்ஜின்களுக்கு மாற்றாக அதே சமயம் முழுமையான எலக்ட்ரிக் கார்களுக்கு மாற விரும்பாத வாடிக்கையாளர்களுக்கு ஹெக்டர் டோமாஹாக் PHEV ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். ஏழு-சீட்டர் SUV-யின் நடைமுறைப் பயன்பாடு மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் எரிபொருள் சிக்கனம் ஆகிய இரண்டையும் விரும்புவோருக்கு இது ஒரு கவர்ச்சிகரமான பேக்கேஜ் ஆகும். அதன் போட்டியாளர்களிடமிருந்து வேறுபட்டு இந்த தொழில்நுட்பத்தை வழங்குவது MG-க்கு சந்தையில் ஒரு வலுவான இடத்தைப் பிடித்துத் தரும்.

வரவிருக்கும் போட்டியாளரான கியா சொரென்டோ -வும் ஒரு ஹைப்ரிட் அமைப்பையும் வழங்கப் போகிறது. ஆகவே போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.














