2026 ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் அறிமுகம்… சந்தையை கலக்குமா ?
வெறுமனே ஒரு ஸ்கார்பியோ N காரின் மீது ஒரு பிக்கப் லோட் இணைக்கப்பட்டது மட்டும் இந்த கார் என நினைக்க வேண்டாம்..
- ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ N -ஐ அடிப்படையாகக் கொண்ட தனது புதிய லைஃப்ஸ்டைல் பிக்கப் டிரக்கின் தயாரிப்பு நிலை மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது. ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மாடல், பெரிய கார்கோ பெட், முரட்டுத்தனமான வடிவமைப்பு மற்றும் பல நவீன அம்சங்களுடன் லைஃப்ஸ்டைல் பிக்கப் பிரிவில் மஹிந்திராவின் மறுபிரவேசத்தைக் குறிக்கிறது. இன்று அறிமுகப்படுத்தப்பட்ட இதன் விவரங்கள் இங்கே:
A post shared by CarDekho India (@cardekhoindia)
வெளிப்புற வடிவமைப்பு
-
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர், ஸ்கார்பியோ N SUV-ஐ அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அதன் தோற்றத்தில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் முக்கிய அம்சங்கள்:
-
முன்பக்கம் பெரிய குரோம் ஸ்டட்கள் கொண்ட செவ்வக வடிவ கிரில் உடன் சதுர வடிவ LED ஹெட்லேம்ப்ஸ்

-
பெரிய ஸ்கிட் பிளேட் மற்றும் கறுப்பு நிற சரவுண்டிங்க்ஸ் உடன் LED ஃபாக்லேம்ப்ஸ்
-
முன்பக்கமாக பாக்ஸியான் தோற்றம் மற்றும் டூயல்-கேப் லே அவுட் உட நேரான விண்ட் ஷீல்டு, சிக்னேச்சர் விண்டோ மற்றும் மிரட்டலான ரூஃப் ரெயில்ஸ்

- அக்ரெசிவ் ஃபிரன்ட் பம்பர் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட ஸ்நோர்கெல்
-
18-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல்கள்

-
பின்பக்கமாக டிசைன் எளிமையாக உள்ளது. ஸ்கொயர்டு-ஆஃப் LED டெயில் லேம்ப்கள் உள்ளன. 'மஹிந்திரா' என்ற பெயர் கம்பீரமாக பொறிக்கப்பட்டுள்ளது

-
மேலும், இந்த பிக்கப் டிரக் வேலி எடிஷன், ரீஃப் எடிஷன், மற்றும் டிரெயில் எடிஷன் என மூன்று தனித்துவமான தீம்களில் வழங்கப்படும். இவை பிரத்யேக நிறங்கள் மற்றும் டீகால்களைக் கொண்டிருக்கும்.
நிறங்கள்
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் மூன்று பிரத்யேக நிறங்களில் கிடைக்கும்:
-
அக்வாரீஃப் (நீலம்)
-
சஹாரா பெய்ஜ்
-
ஆர்டெமிஸ் கிரே
உட்புறம்
மஹிந்திரா இன்னும் முழுமையான இன்டீரியரை வெளியிடவில்லை, ஆனால் வெளியான டீசர்களின்படி,
-
நீங்கள் ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலருக்குள் பார்த்தால் அதை வேறு எந்த உலகளாவிய பிக்கப் டிரக்கிலிருந்தும் வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாக இருக்கும்.
-
போர்ட்ரெயிட்-ஓரியன்டட் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய ஃபோர்-ஸ்போக் ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 4x4 சிஸ்டத்திற்கான ரோட்டரி டயல் ஆகியவை இடம்பெறும் எனத் தெரிகிறது.

-
சென்டர் கன்சோலில் சில்வர் இன்செர்ட்கள், 4x4 சிஸ்டத்திற்கான ரோட்டரி டயல் மற்றும் ஒரு பெரிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை இருக்கும்.
-
தெளிவான கிராபிக்ஸ் மற்றும் அதிக அளவிலான தனிப்பயனாக்கும் வசதிகளைக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஓட்டுநருக்கான மேம்பட்ட கேபின் அனுபவத்தை கொடுக்கும்.
வசதிகள்
-
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் நவீன அம்சங்களின் விரிவான பட்டியலுடன் வரும்.
-
இருப்பினும் இதில் சிங்கிள்-பேன் சன்ரூஃப், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல்-ஜோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், வென்டிலேட்டட் ஃபிரன்ட் சீட்கள் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற பிரீமியம் அம்சங்கள் இடம்பெறும்
பாதுகாப்பு வசதிகள்
மஹிந்திரா முழுமையான அம்சப் பட்டியலை வெளியிடவில்லை. ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர், லெவல்-2 ADAS உட்பட ஒரு முழுமையான பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஃபிரன்ட் அண்ட் ரியர் பார்க்கிங் சென்ஸார்ஸ் ஹில் ஹோல்டு கன்ட்ரோல் ஆகியவை இருக்கலாம்.
-
ஸ்கார்பியோ N மற்றும் XUV 7XO ஆகியவற்றில் இருப்பதை போலவே 540-டிகிரி கேமரா சிஸ்டம் போன்றவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸ்
இந்த லைஃப்ஸ்டைல் பிக்கப், ஸ்கார்பியோ N SUV-ல் உள்ள அதே இன்ஜின் தேர்வுகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் இன்ஜினுடன் 4WD தேர்வு ஆப்ஷனாக வழங்கப்படும்.
| இன்ஜின் |
2-litre mStallion டர்போ-பெட்ரோல் |
2.2-litre mHawk டீசல் |
| பவர் |
203 PS |
Up to 175 PS |
| டார்க் |
Up to 380 Nm |
Up to 400 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT |
| டிரைவ்டிரெயின் |
RWD |
RWD / 4WD |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், AT- ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் (டார்க் கன்வெர்டர்)
RWD- ரியர்-வீல் டிரைவ், 4WD- ஃபோர்-வீல் டிரைவ்
அறிமுக தேதி, விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா Scorpio Lifestyler-ன் விலையை ஏப்ரல் 2027-ல் அறிவிக்க உள்ளது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.19.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது சந்தையில் உள்ள Isuzu V-Cross மற்றும் Toyota Hilux போன்ற மாடல்களுக்குப் போட்டியாக அமையும்.
கார்தேக்கோ சொல்வது...
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் -ன் போல்டான வெளிப்புற வடிவமைப்பு, ஆஃப்-ரோடு திறன்கள் மற்றும் SUV-க்கு நிகரான பிரீமியம் அம்சங்கள் இதன் முக்கிய பலங்களாக அமையும். ஒரு லேடர்-ஃபிரேம் பிக்கப்பின் முரட்டுத்தனத்தையும், ஒரு நவீன SUV-யின் சொகுசு மற்றும் தொழில்நுட்பத்தையும் மஹிந்திரா வெற்றிகரமாக இணைத்தால் இந்த மாடல் லைஃப்ஸ்டைல் பிக்கப் பிரிவில் ஒரு வலுவான இடத்தைப் பிடிக்கும். எதிர்பார்க்கப்படும் ஆக்ரோஷமான விலையில் அறிமுகப்படுத்தப்பட்டால், இது டொயோட்டா ஹைலக்ஸ் மற்றும் இசுஸூ V-Cross-க்கு ஒரு சிறந்த குறைந்த விலை மாற்றாக அமையும்.














