2026 மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் Vs ஸ்கார்பியோ N: ஒரு விரிவான ஒப்பீடு
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர், அதன் கம்பீரமான தோற்றம் மற்றும் ஆஃப்-ரோடுக்கு ஏற்ற வடிவமைப்பு போன்றவற்றால் கூடுதல் கவனம் பெறுகிறது.
- ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திரா தனது புதிய ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் பிக்கப் டிரக்கை ஆகஸ்ட் 14 அன்று உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மிகவும் பிரபலமான ஸ்கார்பியோ N SUV-ஐ அடிப்படையாகக் கொண்டது.
இந்த புதிய லைஃப்ஸ்டைலர், அதன் SUV உடன்பிறப்பிலிருந்து எப்படி டிசைன், ஃபீச்சர்ஸ் மற்றும் பவர்டிரெய்ன் ஆகியவற்றில் வேறுபடுகிறது என்பதை இங்கே விரிவாகப் பார்க்கலாம்.
டிசைன்
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலரின் முன்பக்கம், ஸ்கார்பியோ N-ஐ விட வித்தியாசமாகவும், மிகவும் அக்ரெஸ்ஸிவ் ஆகவும் இருக்கிறது. இதில் சதுர வடிவிலான LED ஹெட்லேம்ப்ஸ், பெரிய க்ரோம் கிரில் மற்றும் சில்வர் பாஷ் இன்செர்ட் உடன் கூடிய பெரிய பம்பர் உள்ளது


ஆனால், ஸ்கார்பியோ N-ல் டூயல்-பேரல் LED ஹெட்லேம்ப்ஸ் மற்றும் தேள் கொடுக்கு போன்ற வடிவில் DRL-கள் கொடுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டில், லைஃப்ஸ்டைலர் ஒரு டூயல்-கேப் லேஅவுட் மற்றும் ஃபிளாட்பெட் உடன் வருகிறது. இரண்டு மாடல்களிலும் 18-இன்ச் அலாய் வீல்கள் இருந்தாலும், லைஃப்ஸ்டைலரில் ஆல்-டெரெய்ன் வீல்களும், ஸ்கார்பியோ N-ல் டைமண்ட்-கட் டூயல்-டோன் வீல்களும் உள்ளன


பின்பக்கத்தில், லைஃப்ஸ்டைலரின் ஃபிளாட் டெயில்கேட்டில் 'மஹிந்திரா' என்ற எழுத்துகளும், செவ்வக வடிவ LED டெயில்லேம்ப்ஸும் உள்ளன. ஸ்கார்பியோ N-ல் செங்குத்தான LED டெயில்லேம்ப்ஸும், பக்கவாட்டில் திறக்கும் டெயில்கேட்டும் உள்ளது.


இன்டீரியர்
டீசர்களின்படி ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலரின் கேபின் மிகவும் மாடர்னாகத் தெரிகிறது. இதில் செங்குத்தாகப் பொருத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், மெல்லிய AC வென்ட்கள் மற்றும் புதிய ஸ்டீயரிங் வீல் டிசைன் ஆகியவை உள்ளன.


மறுபுறம் ஸ்கார்பியோ N-ன் சமீபத்திய அப்டேட்டில் ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் லேஅவுட் மற்றும் பெரிய பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இரண்டு கார்களிலுமே டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே உள்ளது.
வசதிகள்
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலரின் ஃபீச்சர்ஸ் பட்டியல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இதில் பெரிய சென்ட்ரல் டச்ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், டூயல் வயர்லெஸ் சார்ஜர்கள் மற்றும் ஒரு சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கார்பியோ N-ல் 12.3-இன்ச் டச்ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள், வயர்லெஸ் போன் சார்ஜர், டூயல்-ஜோன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்,6 வே பசர் அட்ஜஸ்ட்ட்டபிள் டிரைவர் சீட். 12-ஸ்பீக்கர் சோனி சவுண்ட் சிஸ்டம், மற்றும் கனெக்டட் கார் டெக்னாலஜி போன்ற ஃபீச்சர்ஸ் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு
பாதுகாப்பைப் பொறுத்தவரை, ஸ்கார்பியோ N ஒரு படி மேலே உள்ளது. இது குளோபல் NCAP கிராஷ் டெஸ்டில் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. மேலும் இதில் லெவல் 2 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ்), 540-டிகிரி கேமரா, ஹில் டிசென்ட் கண்ட்ரோல் (HDC) மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (EPB) போன்ற அம்சங்கள் உள்ளன.

ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலரில் 6 ஏர்பேக்குகள், சரவுண்ட் வியூ பார்க்கிங் கேமரா, மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) போன்ற அம்சங்கள் ஸ்கார்பியோ N-ஐப் போலவே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் ஆனது ஸ்கார்பியோ N-ல் உள்ள அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 2-லிட்டர் mStallion டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2-லிட்டர் mHawk டீசல் இன்ஜின் ஆகியவை அடங்கும். இரண்டு இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கும். டீசல் இன்ஜினுடன் ஃபோர்-வீல்-டிரைவ் சிஸ்டமும் வழங்கப்படும்.
| இன்ஜின் | 2-litre mStallion டர்போ-பெட்ரோல் |
2.2-litre mHawk டீசல் |
| பவர் |
203 PS |
Up to 175 PS |
| டார்க் |
Up to 380 Nm |
Up to 400 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT |
| டிரைவ்டிரெயின் |
RWD |
RWD/4WD |
*MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், AT- டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன், RWD- ரியர்-வீல் டிரைவ், 4WD- ஃபோர்-வீல் டிரைவ்

வெளியீட்டுத் தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா ஸ்கார்பியோ N தற்போது ரூ. 13.69 லட்சம் முதல் ரூ. 25.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை விலையில் கிடைக்கிறது. ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலரின் விலையை மஹிந்திரா இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இது சுமார் ரூ. 19.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிக்கப் டிரக் ஏப்ரல் 2027-ல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இது டொயோட்டா ஹிலக்ஸ் மற்றும் இசுஸு வி-கிராஸ் போன்ற கார்களுக்குப் போட்டியாக அமையும்.
கார்தேக்கோ சொல்வது..
ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் ஆனது ஸ்கார்பியோ N-ன் டிசைன் அம்சங்களைப் பெற்றிருந்தாலும் அதன் அக்ரெஸ்ஸிவ் முன்பக்கம் மற்றும் பெரிய கிரில் மூலம் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குகிறது. இதன் ஃபீச்சர்ஸ் பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்.லை என்றாலும், கூட டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா சிஸ்டம், மற்றும் டூயல்-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை இதில் இடம்பெற வாய்ப்புள்ளது.


ஏப்ரல் 2027-ல் அறிமுகமாகும் போது இது ஸ்கார்பியோ N SUV-க்கு ஒரு தனித்துவமான மாற்றாக இருக்கும். இதன் விலை ரூ. 19.79 லட்சத்திற்கும் (எக்ஸ்-ஷோரூம்) குறைவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.














