லுக்ல மட்டுமில்ல இன்டீரியர்லயும் மாஸ்… கலக்கலாக அறிமுகன் ஆன பொலேரோ ‘போல்டு எடிஷன்’
ஒன்று மட்டும் நிச்சயம்; இந்த போல்டு எடிஷன் உங்கள் பொலேரோ காரை ரோட்டில் போகும்போது நிச்சயம் தனியாகவும் கெத்தாகவும் காட்டும்.
- ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திரா நிறுவனம் தனது அடையாளமாகத் திகழும் பொலேரோ SUV காரில் 'போல்டு எடிஷன்' என்ற புதிய பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அடிப்படையில் ஒரு ஆக்சஸரீஸ் பேக்காக அறிமுகமாகியுள்ள இது காரின் வெளிப்புறத்திற்கு ப்ரோன்ஸ் ஃபினிஷிங் மற்றும் உட்புறத்திற்கு புதிய சீட் கவர்ஸ் என பல டிசைன் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய எடிஷனின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்:
A post shared by CarDekho India (@cardekhoindia)
மஹிந்திரா பொலேரோ போல்டு எடிஷன்: என்னவெல்லாம் புதிதாக உள்ளது?
இந்த 'போல்டு எடிஷன்' ஆக்சஸரீஸ் பேக்கின் ஒரு பகுதியாக பொலேரோ காரின் தோற்றத்தை மேம்படுத்த பின்வரும் புதிய அம்சங்களை மஹிந்திரா வழங்குகிறது:
-
ப்ரோன்ஸ் ஃபினிஷிங் கொண்ட பிரண்ட் கிரில்
-
ப்ரோன்ஸ் டச் கொண்ட ரூஃப் ரெயில்கள்
-
ப்ரோன்ஸ் நிற ஃபாக் லேம்ப் கவர்கள்
-
பிளாக் மற்றும் ப்ரோன்ஸ் கலந்த டியூவல் டோன் சைடு கிளாடிங்
-
'Bold Edition' சைடு பேட்ஜிங்
-
ப்ரோன்ஸ் நிற ORVM அப்ளிக்
-
ப்ரோன்ஸ் நிறத்தில் 15 இன்ச் அலாய் வீல்கள்


இது தவிர காரின் உட்புறத்தில் டியூவல் டோன் பிளாக் மற்றும் ப்ரோன்ஸ் லெதரெட் சீட் கவர்ஸ், ரியர் வியூ கேமரா மற்றும் டிசைனர் ஃப்ளோர் மேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மஹிந்திரா நிறுவனம் இந்த பொலேரோ போல்டு எடிஷனின் விலையை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா டீலர்ஷிப்பை அணுகி இதன் விலையைத் தெரிந்து கொள்ளலாம்.
மஹிந்திரா பொலேரோ பற்றி...
இந்தியாவில் மிக நீண்ட காலமாக வெற்றிகரமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்றான பொலேரோ தனது முரட்டுத்தனமான பாடி ஸ்ட்ரக்சர், எளிமையான உட்புற வடிவமைப்பு மற்றும் அளப்பரிய நம்பகத்தன்மையால் கிராமப்புற சந்தைகளில் மக்களின் முதல் தேர்வாக தொடர்ந்து நீடிக்கிறது.

இதன் உட்புறம் மிகவும் எளிமையான டேஷ்போர்டு, நாலு ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றுடன் மிக சிம்பிளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்சங்களைப் பொறுத்தவரை மேனுவல் AC, ஸ்டீயரிங் மவுண்டெட் கன்ட்ரோல்கள், 7 இன்ச் டச்ப்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், USB Type-C சார்ஜிங் போர்ட் மற்றும் பவர் விண்டோஸ் போன்ற அத்தியாவசிய வசதிகள் மட்டுமே உள்ளன.

பாதுகாப்பு அம்சங்களாக டியூவல் ஏர்பேக்குகள், ABS, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் கேமரா மற்றும் முதல் இரண்டு வரிசை பயணிகளுக்கான சீட்பெல்ட் ரிமைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
பவர்டிரெயின்
மஹிந்திரா லைன்-அப்பில் ஒரு கடுமையான உழைப்பாளியாக இருக்கும் பொலேரோ காரில், அதே அளவுக்கு கரடுமுரடான பயன்பாட்டிற்கு ஏற்ற 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இதோ இதன் விவரக்குறிப்புகள்:
| இன்ஜின் |
1.5-லி டீசல் |
| பவர் | 76 PS |
| டார்க் |
210 Nm |
| டிரான்ஸ்மிஷன் |
5-speed MT |
| டிரைவ்டிரெயின் | RWD |
MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், RWD- ரியர் வீல் டிரைவ்

விலை மற்றும் போட்டியாளர்கள்
மஹிந்திரா பொலேரோ கார் ரூ.8.57 லட்சம் முதல் ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்திரா பொலேரோவிற்கு நேரடி போட்டியாளர்கள் என்று யாருமே இல்லை. இருப்பினும் இதே போன்ற ஆற்றலும் திறனும் கொண்ட சற்று நவீனமயமான ஒரு காரை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்றால் பொலேரோ நியோ காரை பரிசீலிக்கலாம்.
கார்தேக்கோவின் கருத்து...
இந்திய கார் சந்தையில் பொலேரோவை போல ஒரு உண்மையான உழைப்பாளி கார் வேறு எதுவுமே இல்லை. இரண்டு தசாப்தங்களைக் கடந்தும் பலமுறை ஃபேஸ்லிஃப்ட் மாற்றங்களைக் கண்ட பிறகும், ஆடம்பர வசதிகள் பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட, கிராமப்புற மற்றும் சிறு நகர சந்தைகளில் வர்த்தக ரீதியாகவும் சொந்த பயன்பாட்டிற்கும் மிகவும் பிரபலமான காராக இது திகழ்கிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த போல்டு எடிஷன் ஒரு விருப்பத்தேர்வுக்கான ஆக்சஸரீஸ் பேக் மட்டுமே என்பதால் இது காரின் ஒட்டுமொத்த விற்பனையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. இருப்பினும் சாலைகளில் சர்வசாதாரணமாகக் காணப்படும் வெள்ளை நிற பொலேரோக்களுக்கு மத்தியில் இந்த எடிஷன் நிச்சயம் தனித்து நிற்கும்.
புதிய பொலேரோ போல்டு எடிஷன் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள்!














