• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    2025 ஆண்டில் Kia Carens EV இந்தியாவிற்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

    400 கி.மீ -க்கும் அதிகமான ரேஞ்சை கொண்டதாக இருக்கும்.இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது இது மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் MPV ஆக இருக்கலாம்.

    rohit
    rohit
    published on ஏப்ரல் 08, 2024 20:39 ist
    info icon
    published onApr 08, 2024 20:39 IST
    last updated onApr 08, 2024 20:39 IST
    51 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    • கியா 2022 -ல் இந்தியாவை மையமாகக் கொண்ட EV -யை 2025 ஆண்டில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டது

    • இந்தியாவை மையமாகக் கொண்ட EV ஆனது தற்போது கேரன்ஸ் EV எலக்ட்ரிக் MPV என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    • இது 2027 ஆம் ஆண்டுக்குள் அதன் உலகளாவிய வரிசையில் கியா திட்டமிட்டுள்ள 15 EVகளின் ஒன்றாக இருக்கும்.

    • டூயல் 10.25-இன்ச் டிஸ்ப்ளேக்கள் சன்ரூஃப் மற்றும் ADAS போன்ற பிரீமியம் வசதிகளைப் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

    • 2025 ஆண்டில் இந்தியா வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது. விலை ரூ.20 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).

    2024 கியா முதலீட்டாளர் தினக் கூட்டம் தென் கொரியாவில் நடைபெற்றது. இதன் மூலமாக உலகளாவிய அதன் எதிர்காலத் திட்டங்களுக்கான புதிய விவரங்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு திட்ட வரைபடத்தில் கொரிய கார் தயாரிப்பாளர் இந்திய சந்தைக்கான கேரன்ஸ் இவி -யின் வருகையை உறுதிப்படுத்தினார். கேரன்ஸ் இவி முதன்முதலில் 2022 -ல் இந்தியாவை மையமாகக் கொண்ட EV என குறிப்பிடப்பட்டது. இது 3-வரிசை MPVயை அடிப்படையாகக் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதைக்கு கியா EV6 மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கியா நிறுவனத்தின் ஒரே ஆல் எலக்ட்ரிக் கார் ஆகும். மேலும் ஃபிளாக்ஷிப் கியா EV9 எஸ்யூவி 2024 ஆண்டில் வரவுள்ளது.

    எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் பவர்டிரெய்ன்

    இந்தியாவிற்கான வரவிருக்கும் கேரன்ஸ் EV பற்றிய தொழில்நுட்ப விவரங்களை கார் தயாரிப்பாளர் வழங்கவில்லை. ஒரே ஒரு மோட்டார் அமைப்புடன் சுமார் 400-500 கிமீ வரை கிளைம் செய்யப்பட்டுள்ள ரேஞ்சை கொண்டிருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது DC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் V2L (வெஹிகிள் டூ வெஹிகிள்) வசதியை கொண்டிருக்கும்.

    புதிய மாடல்களின் ஒரு பகுதி -யின் விவரங்கள் வெளியாகியுள்ளன

    சமீபத்தில் வெளியிடப்பட்ட EV5 உட்பட 2027 ஆம் ஆண்டுக்குள் கியாவின் உலகளாவிய வரிசையின் ஒரு பகுதியாக இருக்கும் 15 EV -களின் ஒரு பகுதியாக கேரன்ஸ் EV அறிவிக்கப்பட்டது. இந்த மாதிரிகள் குறிப்பிட்ட சந்தைகளுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. இதில் கேரன்ஸ் EV மட்டுமே தற்போது இந்தியாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. EV -கள் மற்றும் இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) மாதிரிகள் இரண்டும் உலகளவில் கியா -ன் 13 தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மேலும் இரண்டு EV-குறிப்பிட்ட ஆலைகள் தென் கொரியாவில் உற்பத்தி செய்யப்படும்.

    மேலும் படிக்க: EV பேட்டரிக்கான உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் ஹூண்டாய்-கியா, எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது

    வசதிகள் நிறைந்த காராக இருக்க வாய்ப்புள்ளது

    கேரன்ஸ் EV -ன் வசதிகளின் பட்டியல் தொடர்பான விவரங்கள் இன்னும் குறைவாகவே இருந்தாலும் கியா அதை கார்களின் கொடுக்கும் நாங்கள் நம்புகிறோம். எலக்ட்ரிக் MPV அதே டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் (இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்டேஷனுக்காக ஒவ்வொன்றும் 10.25-இன்ச்) வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், மற்றும் ஸ்டாண்டர்டாக சன்ரூஃப் ஆகியவற்றுடன் கியா கேரன்ஸ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பாதுகாப்பைப் பொறுத்தவரை இது 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக) எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றைப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். 2026 ஆம் ஆண்டிற்குள் அதன் 63 சதவீத மாடல்களை பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் பொருத்துவதற்கு கியா திட்டமிட்டுள்ளதால் கேரன்ஸ் EV ஆனது சில அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களை பெறக்கூடும்.

    எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

    கியா கேரன்ஸ் EV 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம் இது நாட்டில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் MPV ஆகும். இதன் விலை ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும். மேலும் இது அறிமுகத்தில் நேரடி போட்டியாளர்களைக் கொண்டிருக்காது. ஆனால் இது மிகவும் குறைவான ஆப்ஷனாக இருக்கும். BYD E6 மாருதியில் இருந்தும் எலக்ட்ரிக் MPV -யை எதிர்பார்க்கிறோம் ஆனால் அது 2026 ஆம் ஆண்டுக்கு முன் வரும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. அதற்குப் பதிலாக நீங்கள் ஒரு ஹைபிரிட் ஆப்ஷனுக்கு ஆர்வமாக இருந்தால் நீங்கள் ஏற்கனவே உள்ள டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ்/ மாருதி இன்வவிக்டோ கார்களை பார்க்கலாம்.

    மேலும் படிக்க: டீசல் கேரன்ஸ்

    was this article helpful ?

    rohit
    Rohit Shah is a Content Writer with the CarDekho Group and an automotive journalist with nearly seven years of experience covering the automotive industry. He holds a Bachelor\'s degree in Business Management (International Business) and a Post Graduate Diploma in Business Management. Over the course of his career, Rohit has authored more than 2,500 articles for CarDekho, covering topics ranging from new car launches to the latest developments in the Indian and global automotive industries. His interest in cars began in childhood when he started collecting scale models, and he unwinds by taking a car out for a spin. When he\'s not talking or writing about cars, you can find him watching new movies and series or learning new languages.மேலும் படிக்க

    Write your Comment on Kia காரென்ஸ் கிளவுஸ் EV

    explore similar கார்கள்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • உபகமிங்
    • denza d9
      denza d9
      Rs.1 - 1.10 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • denza z9 ஜிடி
      denza z9 ஜிடி
      Rs.1.25 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா தார் இ
      மஹிந்திரா தார் இ
      Rs.25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw chery icar v23
      jsw chery icar v23
      Rs.20 - 25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw jaecoo j5 இவி
      jsw jaecoo j5 இவி
      Rs.20 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience