• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    எந்த கியா செல்டோஸ் மைலேஜ்ல கிங் ... பெட்ரோலா இல்லை டீசலா ?

    டீசல் என்ஜின்கள் இன்னமும் சிறந்த தேர்வாக இருந்தாலும் பெட்ரோல் என்ஜின்களை விட அவற்றிடம் இருந்த அந்த இயல்பான மைலேஜ் இப்போது குறைந்துவிட்டது.

    ujjawall
    ujjawall
    modified on அக்டோபர் 23, 2026 12:47 ist
    info icon
    published onOct 23, 2026 12:33 IST
    last updated onOct 23, 2026 12:47 IST
    10 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Kia Seltos Petrol vs Diesel

    டீசல் மற்றும் பெட்ரோல் இன்ஜின்களுக்கு இடையேயான ஒப்பீட்டில் அதிகபட்ச மைலேஜ் விரும்புபவர்களுக்கு எப்போதுமே டீசல் இன்ஜின்கள்தான் முதன்மைத் தேர்வாக இருந்துவந்துள்ளன. இருப்பினும் கடுமையான உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து டீசல் இன்ஜின்கள் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளது. நவீன டீசல் இன்ஜின்களை இந்த விதிகளுக்கு உட்பட்டு இயக்க DPF மற்றும் யூரியா அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களை கார்தயாரிப்பாளர்கள் பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் பழைய டீசல் இன்ஜின்கள் அளவுக்கு இவை எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. சிறந்த மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவை விரும்புபவர்களுக்கு இன்றைக்கும் டீசல் இன்ஜின்தான் சரியான தேர்வா என்பதை அறிந்துகொள்ள செல்டோஸின் டர்போ-பெட்ரோல் DCT, டீசல் ஆட்டோமேட்டிக் மற்றும் டீசல் மேனுவல் ஆகிய மூன்று மாடல்களையும் ஒரே நேரத்தில் நிஜமான சாலைச் சூழலில் சோதனை செய்து பார்த்தோம். இதன் முடிவுகள் நிச்சயம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.

    பயணப் பாதை மற்றும் சோதனைச் சூழல் சோதனையின் முடிவுகள் உண்மையான பயன்பாட்டுக்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக வெவ்வேறு வகையான சாலைகளைத் தேர்ந்தெடுத்தோம். அதன்படி 50 கி.மீ எக்ஸ்பிரஸ்வே சாலை, மேடு பள்ளங்கள் மற்றும் குறைந்த வேகத்தில் செல்லக்கூடிய 50 கி.மீ பழைய நெடுஞ்சாலை, மற்றும் 50 கி.மீ கடுமையான நகர போக்குவரத்துப் பகுதி என மொத்தம் 150 கி.மீ தூரம் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    மூன்று கார்களும் ஒரே நேரத்தில் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, சாதாரண வாகன ஓட்டிகள் ஓட்டுவது போன்ற இயல்பான முறையிலேயே இயக்கப்பட்டன. தேவையின்றி சட்டென வேகம் கூட்டுவதையோ திடீர் பிரேக் அடிப்பதையோ அல்லது தேவையில்லாமல் அதிக கியரில் வண்டியை இயக்குவதையோ முற்றிலுமாகத் தவிர்த்தோம். ஏசி வெப்பநிலை 23 டிகிரியில் வைக்கப்பட்டு, ஏர் வென்டிலேஷனும் இயக்கி வைக்கப்பட்டிருந்தது.முக்கியக் குறிப்பு: இந்தச் சோதனையில் டீசல் மேனுவல் கார் மற்ற இரு கார்களையும் வீடியோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஆதரவு வாகனமாக செயல்பட்டது. கேமராமேனின் தேவைக்கேற்ப ஓட்டுநர் காரின் வேகத்தை மாற்றியமைக்க வேண்டியிருந்ததால், இதன் மைலேஜ் அளவுகளில் சில மாற்றங்கள் இருக்கக்கூடும். இப்போது இறுதி முடிவுகளுக்குச் செல்லும் முன், ஒவ்வொரு 50 கி.மீ தூரத்தின் முடிவிலும் பதிவான புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

    சோதனை பாதை மற்றும் சூழல்

    இந்த மைலேஜ் சோதனையை மிகவும் துல்லியமாகவும் இயல்பாகவும் மாற்ற, அனைத்து விதமான சாலைகளும் இதில் சேர்க்கப்பட்டன. இதில் 50 கி.மீ எக்ஸ்பிரஸ்வே விரைவுச்சாலை, 50 கி.மீ ஏற்ற இறக்கங்கள் மற்றும் குறைந்த வேகத்தில் செல்லக்கூடிய பழைய நெடுஞ்சாலை, மற்றும் 50 கி.மீ கடுமையான நகர போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை என மொத்தம் 150 கி.மீ தூரம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

    Kia Seltos

    மூன்று கார்களும் ஒரே நேரத்தில், போக்குவரத்து வேகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, சாதாரண ஓட்டுநர்கள் ஓட்டுவது போல இயக்கப்பட்டன. திடீர் வேக அதிகரிப்பு, சட்டென்று பிரேக் அடிப்பது அல்லது தவறான கியரில் காரை இழுப்பது போன்ற விஷயங்கள் தவிர்க்கப்பட்டன. கார்களின் AC 23 டிகிரியில் வைக்கப்பட்டு, ஏர் வென்டிலேஷனும் இயக்கப்பட்டிருந்தது.

    முக்கிய குறிப்பு:

    இந்தச் சோதனையின் போது, வீடியோ படப்பிடிப்புக்காகக் கேமரா குழுவினரின் தேவைக்கேற்ப வேகத்தைக் கூட்டிக் குறைக்க வேண்டியிருந்ததால், டீசல் மேனுவல் கார் மட்டும் சற்று மாறுபட்ட முறையில் ஓட்டப்பட்டது. இதனால் இதன் மைலேஜ் முடிவுகளில் சிறிய மாற்றம் இருக்கலாம்.

    ஒவ்வொரு 50 கிலோமீட்டர் கடந்ததுக்குப் பிறகும் கார்களின் MID திரையில் காட்டப்பட்ட மைலேஜ் விவரங்களைப் பார்ப்போம்.

    எக்ஸ்பிரஸ்வே பயணம் (சராசரி வேகம்: 80 - 100 கி.மீ/மணி)

    போக்குவரத்து நெரிசல் இல்லாத எக்ஸ்பிரஸ்வே சாலையில் பயணம் மிகவும் சுமூகமாக அமைந்தது. இரு கார்களும் க்ரூஸ் கண்ட்ரோல் முறையில் இயக்கப்பட்டன.

    Kia Seltos

    50 கி.மீ எக்ஸ்பிரஸ்வே பயணத்திற்கு பின் திரையில் காட்டப்பட்ட மைலேஜ்

    டர்போ-பெட்ரோல் DCT 

    15.4 கிமீ/லி

    டீசல் AT

    16.2 கிமீ/லி

    நெடுஞ்சாலை பயணம் (சராசரி வேகம்: 50 - 80 கி.மீ/மணி)

    Kia Seltos

    பழைய நெடுஞ்சாலையிலும் பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் இல்லை. எக்ஸ்பிரஸ்வே மற்றும் பழைய நெடுஞ்சாலை என மொத்தமாக 100 கி.மீ தூரத்தைக் கடந்த பிறகு கிடைத்த மைலேஜ் விவரம்:

    100 கி.மீ பயணத்திற்கு பின் திரையில் காட்டப்பட்ட மைலேஜ்

    டர்போ-பெட்ரோல் DCT 

    15.9 கிமீ/லி

    டீசல் AT

    16.6 கிமீ/லி

    நகரப் பகுதி பயணம் (சராசரி வேகம்: 0 - 40 கி.மீ/மணி)

    Kia Seltos

    புனே நகரத்தின் போக்குவரத்து நெரிசல் எதிர்பார்த்ததை விடக் குறைவாகவே இருந்தது. 50 கி.மீ நகரப் பயணத்தில் கிடைத்த மைலேஜ் இதோ

    50 கி.மீ நகரப் பயணத்தில் மட்டும் கிடைத்த மைலேஜ்:

    டர்போ-பெட்ரோல் DCT 

    10.3 கிமீ/லி

    டீசல் AT

    10.1 கிமீ/லி

    மொத்த 150 கி.மீ பயணத்திற்குப் பின் திரையில் காட்டப்பட்ட மைலேஜ்

    டர்போ-பெட்ரோல் DCT 

    13.2 கிமீ/லி

    டீசல் AT

    13.4 கிமீ/லி

    டீசல் MT

    14.3 கிமீ/லி 

    இறுதி கணக்கீடு மற்றும் உண்மையான மைலேஜ் முடிவுகள்

    முடிவுகள்

    பெட்ரோல் AT

    டீசல் AT

    டீசல் MT

    ஓட்டப்பட்ட மொத்த தூரம்

    150.3 கி.மீ

    150.9 கி.மீ

    157 கி.மீ

    நிரப்பப்பட்ட எரிபொருள் கட்டணம்

    ரூ. 1271.87

    ரூ. 969.52

    ரூ. 1174.62 

    செலவான எரிபொருள் அளவு

    11.41 litre

    9.88 litre

    11.97 litre

    சோதனையில் கிடைத்த நிஜமான மைலேஜ்*

    *

    13.17 கிமீ/லி

    15.27 கிமீ/லி

    13.11 கிமீ/லி

    ஒரு கிலோமீட்டருக்கான செலவு

    ரூ. 8.46/கி.மீ

    ரூ. 6.42/கி.மீ

    ரூ. 7.48/கி.மீ

    *சோதனையில் கிடைத்த நிஜமான மைலேஜ்* = கடக்கப்பட்ட தூரம் / செலவான எரிபொருள்

    சோதனை முடிவில் மீண்டும் டேங்க் நிரப்பிப் பார்த்தபோது, டீசல் ஆட்டோமேட்டிக் காரின் மீட்டரில் காட்டியதை விட நிஜமான மைலேஜ் லிட்டருக்கு 2 கி.மீ வரை கூடுதலாக இருந்தது தெரியவந்தது.

    Kia Seltos

    வீடியோ படப்பிடிப்புக்காகச் சற்று வேகமாக முடுக்கி ஓட்டப்பட்டதால் டீசல் மேனுவல் காரின் மைலேஜ் குறைவாகக் கிடைத்தது. மற்ற கார்களைப் போல நிதானமாக ஓட்டியிருந்தால் நிச்சயமாக இதுவே அதிக மைலேஜ் தந்திருக்கும். பெட்ரோல் ஆட்டோமேட்டிக் காரின் திரையில் காட்டிய மைலேஜும் நிஜமான மைலேஜும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தது. எதிர்பார்த்தபடியே இதன் ஓடும் செலவுதான் மற்றவற்றை விட அதிகமாக உள்ளது.

    Kia Seltos

    கார்தேக்கோவின் பார்வை...

    பெட்ரோல் காரை விட டீசல் காரின் இயங்கு செலவு குறைவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், முன்பை போல பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு இடையேயான மைலேஜ் வித்தியாசம் இப்போது அவ்வளவு பெரியதாக இல்லை. காரின் விலையைப் பொறுத்தவரை, செல்டோஸின் பெட்ரோல் மாடல்களை விட டீசல் மாடல்கள் ரூ. 30,000 முதல் ரூ. 80,000 வரை மட்டுமே கூடுதல் விலையில் வருகின்றன. இதனால் மாதத் தவணையில் பெரிய வித்தியாசம் இருக்காது. முன்பு டீசல் கார்கள் பெட்ரோல் கார்களை விட ரூ. 1 லட்சம் முதல் ரூ. 1.5 லட்சம் வரை அதிக விலையில் விற்றது நினைவிருக்கலாம்.

    Kia Seltos 

    அப்படியானால் யார் டீசல் காரை வாங்க வேண்டும்? தினமும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் அடிக்கடி நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்வேகளில் பயணிப்பவர்களுக்கு டீசல் என்ஜின்தான் சிறந்த தேர்வு. இது சிறந்த மைலேஜ், அதிக டேங்க் ரேன்ஜ் மற்றும் குறைவான இயங்கு செலவைக் கொடுக்கும்.

    உங்கள் பயன்பாடு பெரும்பாலும் நகரத்திற்குள் மட்டுமே இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் அதிக நேரம் செலவிடுகிறீர்கள், நீண்ட தூரப் பயணங்கள் அரிது என்றால் பெட்ரோல் என்ஜின் உங்களுக்கு கச்சிதமாக இருக்கும். இது அமைதியான பயண அனுபவத்தைத் தருவதோடு ஆரம்பக்கட்ட விலையையும் மிச்சப்படுத்தும். மேலும் நகரத்திற்குள் குறுகிய தூரம் மட்டுமே ஓட்டுவதால் ஏற்படும் DPF அடைப்பு சார்ந்த சிக்கல்களும் இதில் இருக்காது.

    மொத்தத்தில் டீசல் என்ஜின்கள் மைலேஜில் தங்களின் பழைய அசுரத்தனமான முன்னிலையைச் சற்று இழந்திருந்தாலும் நீண்ட தூரப் பயணங்களுக்கு இன்னமும் டீசல்தான் ராஜா!

    was this article helpful ?

    ujjawall
    Ujjawall Agarwal is a Senior Editor at the CarDekho Group and an Automotive Journalist with over 4 years of experience. He is an Automotive Engineer on paper, but believes that vehicles are more than just machines and purchases that are done rationally. He specialises in cars and has an expertise in looking beyond the brochure of a car, encapsulating who a car is truly fit for. At CarDekho, he has done everything from writing news pieces, covering launch events to ideating features, hosting, and reviewing cars. With this, he now has a strong grip on automotive industry trends, buyer requirements and vehicle nuances that help him give informed buying advice based on technical and real-world experience.மேலும் படிக்க

    Write your Comment on Kia Seltos

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience