இந்த தீபாவளிக்கு ஆட்டோமேட்டிக் CNG கார் வாங்கப் போறீங்களா? மாருதியின் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ... எது பெஸ்ட்?
மூன்று மாருதி மாடல்கள் எரிபொருளைச் சேமிக்கும் ஒரே ஃபார்முலா, கூடவே ஒரு ஆட்டோமேட்டிக் ஆப்ஷன். இவற்றில் இந்த தீபாவளிக்கு உங்கள் காரேஜை அலங்கரிக்க இதில் எந்த கார் தகுதியானது?
- ஒரு கருத்தை எழுதுக

பண்டிகைக் காலம் வரும்போதே புதிய கார் வாங்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் தொற்றிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகைக்கு கார் வாங்க திட்டமிட்டிருந்தால், நீண்ட கால அடிப்படையில் உங்கள் பாக்கெட்டைப் பக்வமாகப் பார்த்துக்கொள்ளும் வகையிலான தேர்வுகளை பரிசீலிக்கலாம். CNG கார்கள் எரிபொருள் செலவைக் கணிசமாகக் குறைக்கும் அதேவேளையில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் டிரைவிங் செய்வதை மிகவும் எளிதாக்குகிறது. இந்த இரண்டையும் ஒரே பேக்கேஜாக எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்விஃப்ட் , டிசையர் மற்றும் பலேனோ ஆகிய மூன்று சிறந்த மாடல்களில் AMT வசதியுடன் கூடிய CNG ஆப்ஷனை மாருதி சுஸூகி நிறுவனம் வழங்குகிறது.
இருப்பினும் விலை, பாடி ஸ்டைல், வசதிகள் மற்றும் பயன்பாடு என பல விஷயங்களில் மாறுபடுவதால் இந்த மூன்றில் ஒன்றை தேர்வு செய்வது அத்தனை சுலபமல்ல. இந்த தீபாவளிக்கு ஒரு சிறந்த ஆட்டோமேட்டிக் CNG காரை வாங்க நீங்கள் முடிவு செய்திருந்தால், உங்கள் பணத்திற்கு எது சரியான தேர்வாக இருக்கும் என்பதைக் கீழே விரிவாகப் பார்ப்போம்.
மைலேஜ்
| மாடல் |
மாருதி ஸ்விஃப்ட் |
மாருதி டிசையர் |
மாருதி பலேனோ |
| ARAI- கிளைம்டு மைலேஜ் (CNG AMT) |
35.34 கி.மீ/kg |
36.47 கி.மீ/kg |
34.47 கி.மீ/kg |
-
இந்த 3 கார்களிலுமே 70 PS பவர் மற்றும் 102 Nm டார்க் திறனை வெளிப்படுத்தும் Z-சீரிஸ் 1.2-லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் இந்த செய்தியில் நாம் AMT ஆப்ஷன் குறித்து மட்டுமே விரிவாகப் பார்க்கிறோம்.

-
இந்த மூன்று கார்களிலேயே மாருதி டிசையர் தான் அதிகபட்சமாக ஒரு கிலோ CNGக்கு 36.47 கி.மீ மைலேஜ் தருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஸ்விஃப்ட் 35.34 கி.மீ மைலேஜ் வழங்கி இரண்டாம் இடத்தில் உள்ளது.
-
டிசையருடன் ஒப்பிடும்போது பலேனோ 2 கி.மீ மைலேஜ் குறைவாகக் கொடுத்து 34.47 கி.மீ மைலேஜ் தருகிறது. இருப்பினும் இந்த பிரிவில் இது ஒரு சிறப்பான மைலேஜ் அளவாகும்.
டேங்க் கொள்ளளவு
| மாடல் |
மாருதி ஸ்விஃப்ட் |
மாருதி டிசையர் |
மாருதி பலேனோ |
|
|
55 லி |
55 லி |
55 லி |
|
|
37 லி |
37 லி |
37 லி |
-
எரிபொருள் டேங்க் கொள்ளளவைப் பொறுத்தவரை இந்த மூன்று கார்களுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை.
-
ஸ்விஃப்ட், டிசையர் மற்றும் பலேனோ ஆகிய மூன்றுமே 55-லிட்டர் (வாட்டர் ஃபில்லிங் கேபாசிட்டி) CNG டேங்க் மற்றும் 37-லிட்டர் பெட்ரோல் டேங்கை பெற்றுள்ளன.
டிரைவிங் ரேஞ்ச்
| மாடல் |
மாருதி ஸ்விஃப்ட் |
மாருதி டிசையர் |
மாருதி பலேனோ |
|
|
300 கி.மீ |
310 கி.மீ |
290 கி.மீ |
-
55-லிட்டர் டேங்கில் ஏறக்குறைய 8.5 கிலோ CNG நிரப்ப முடியும் என்ற கணிப்பின் அடிப்படையில், ARAI மைலேஜைப் பெருக்கி இந்த தோராயமான டிரைவிங் ரேஞ்ச் கணக்கிடப்பட்டுள்ளது.
-
CNG ஃபில்லிங் பம்பின் அழுத்தத்தைப் பொறுத்து காரில் நிரப்பப்படும் CNG அளவு மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.

-
இந்தக் கணக்கீட்டின்படி டிசையர் அதிகபட்ச டிரைவிங் ரேஞ்சை வழங்கும் என்றும், அதற்கு அடுத்தபடியாக ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
-
இவை அனைத்துமே தோராயமான புள்ளிவிவரங்கள் மட்டுமே. உங்கள் டிரைவிங் ஸ்டைல், டிராஃபிக், சாலையின் அமைப்பு மற்றும் நிரப்பப்படும் CNG அளவு ஆகியவற்றைப் பொறுத்து நிஜமான டிரைவிங் ரேஞ்ச் மாறுபடலாம்.
வேரியண்ட்கள் மற்றும் விலை
| மாருதி ஸ்விஃப்ட் |
மாருதி டிசையர் |
மாருதி பலேனோ |
|||
| வேரியண்ட் |
விலை |
வேரியண்ட் |
விலை |
வேரியண்ட் |
விலை |
| VXi CNG AMT |
ரூ. 7.92 லட்சம் |
VXi CNG AMT |
ரூ. 8.53 லட்சம் |
Delta CNG AMT |
ரூ. 8.32 லட்சம் |
| VXi (O) CNG AMT |
ரூ. 8.18 லட்சம் |
ZXi CNG AMT |
ரூ. 9.53 லட்சம் |
Zeta CNG AMT |
ரூ. 9.32 லட்சம் |
| ZXi CNG AMT |
ரூ. 8.86 லட்சம் |
- |
- |
- |
- |
(அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம், இந்தியா)
-
மேலே உள்ள அட்டவணையைப் பார்க்கும்போது மாருதி ஸ்விஃப்ட் தான் இந்த மூன்றிலும் மிகவும் சிக்கனமான தேர்வாக இருக்கிறது.
-
CNG AMT காரின் ஆரம்ப வேரியண்ட்களை ஒப்பிடும்போது டிசையரை விட ஸ்விஃப்ட் ரூ. 61,000 குறைவான விலையிலும் பலேனோவை விட ரூ. 40,000 குறைவான விலையிலும் கிடைக்கிறது.

-
டிசையர் மற்றும் பலேனோ கார்களில் இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே CNG AMT ஆப்ஷன் வழங்கப்படும் நிலையில், ஸ்விஃப்ட் காரில் மூன்று வேரியண்ட்களில் இது கிடைப்பதால் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சாய்ஸ் கிடைக்கிறது.
-
மாருதி டிசையர் காரின் டாப்-எண்ட் வேரியண்ட் ரூ. 9.53 லட்சம் என்ற அதிகபட்ச விலையில் விற்பனையாகிறது.
-
டாப்-எண்ட் CNG AMT வேரியண்ட்களை எடுத்துக்கொண்டால், டிசையர் கார் பலேனோவை விட ரூ. 21,000 மற்றும் ஸ்விஃப்ட்டை விட ரூ. 67,000 கூடுதல் விலையைக் கொண்டுள்ளது.
கார்தேக்கோவின் கருத்து...
மாருதி ஸ்விஃப்ட் CNG AMT மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதுடன் அதிக வேரியண்ட் தேர்வுகளையும் தருகிறது. மறுபுறம் டிசையர் CNG AMT மிகச் சிறந்த மைலேஜ் மற்றும் அதிக டிரைவிங் ரேஞ்சை வழங்குவதால் தினமும் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கு இது பக்காவான ஆப்ஷனாக இருக்கும். பலேனோ CNG AMT ஸ்விஃப்ட்டை விட கூடுதல் விலையைக் கொண்டிருந்தாலும் டிசையரின் ஆரம்ப விலையை விடக் குறைவாக அமைந்து ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் அனுபவத்தைத் தருகிறது. கார் வாங்கும் பட்ஜெட்டைக் குறைவாக வைப்பதே உங்கள் இலக்கு என்றால் ஸ்விஃப்ட் தான் பெஸ்ட். மைலேஜிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் டிசையரைத் தேர்ந்தெடுக்கலாம். அதேநேரம் கம்பீரமான லுக் மற்றும் கூடுதல் வசதிகள் வேண்டும் என்றால் பலேனோவை தாராளமாக பரிசீலிக்கலாம்.
இருப்பினும் உங்கள் இறுதி முடிவு என்பது உங்களுக்குப் பிடித்த பாடி ஸ்டைல் பட்ஜெட் மற்றும் அத்தியாவசியத் தேவைகளைப் பொறுத்தே அமையும். டிசையர் ஒரு காம்பேக்ட் செடான் என்பதால் மற்ற இரண்டு கார்களை விட இதில் அதிக இடவசதி கிடைக்கும். ஸ்விஃப்ட் மற்றும் பலேனோ ஆகிய இரண்டுமே ஹேட்ச்பேக் மாடல்கள் தான் என்றாலும் பலேனோ அதிகப்படியான அம்சங்களுடன் சற்று பிரீமியம் காராக மாறுபடுகிறது.
இந்த மூன்று மாருதி CNG AMT கார்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த கார் எது என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.














