தார் OG பாணியில் ஒரு குட்டி SUV... வெளியானது மஹிந்திரா விஷன் S-ன் கேபின் லுக்
விஷன் S மாடலில் டியூவல்-டிஸ்ப்ளே செட்டப் மற்றும் தனித்துவமான வடிவத்திலான ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
- ஒரு கருத்தை எழுதுக

சப்-காம்பேக்ட் SUV சந்தையில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் நிலையில் 2025 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட 'விஷன் S' கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த செக்மென்ட்டிற்காக மற்றொரு புதிய தயாரிப்பை மஹிந்திரா நிறுவனம் தயார் செய்து வருகிறது. விரைவில் வரவிருக்கும் இந்த புதிய மஹிந்திரா SUV மாடலானது சப்-4m SUV பிரிவில் XUV 3XO மற்றும் பிற கார்களுக்கு இணையான இடத்தைப் பிடிக்கும்; அதுதான் விஷன் S மாடலாகும்.
சமீபத்தில் இந்த கார் மீண்டும் சாலைகளில் சோதனையோட்டத்தின் போது ஸ்பை படங்களாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பல புரொடக்ஷன்-ஸ்பெக் அம்சங்கள், கார் வெளிவரும் போது எப்படி இருக்கும் என்பதை மிக நெருக்கமாக நமக்குக் காட்டுகின்றன. அந்த ஸ்பை படங்களில் தெரியவந்துள்ள தகவல்கள் மற்றும் இந்த காரைப் பற்றி நமக்குத் தெரிந்த பிற விவரங்களைப் பற்றி இப்போது பார்ப்போம்:
என்னவெல்லாம் தெரிகிறது?
முன்னதாகப் பலமுறை சோதனையோட்டத்தின் போது காணப்பட்ட மஹிந்திரா விஷன் S, தற்போது மீண்டும் ஸ்பை படங்களாக வெளியாகியுள்ளது. ஆனால் இந்த முறை இன்டீரியர் உட்பட உற்பத்தியாக உள்ள மாடலுக்குரிய தெளிவான காட்சிகள் நமக்குக் கிடைத்துள்ளன.
முன்பக்க டிசைனைப் பொறுத்தவரை விஷன் S மாடலானது கிரில்லில் உள்ள கிடைமட்ட கோடுகள், LED ஹெட்லேம்ப்கள் மற்றும் தடிமனான ஃப்ரண்ட் பம்பருடன் கூடிய பாக்ஸி வடிவம் மற்றும் சிலுஹவுட்டைக் கொண்டுள்ளது.

பக்கவாட்டில் வீல் ஆர்ச் கிளேடிங், சைடு ஃபூட்ஸ்டெப் மற்றும் கேமராவுடன் கூடிய ORVM-களைக் காண முடிகிறது. இது காரில் 360-டிகிரி கேமரா செட்டப் இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

உட்புறத்தைப் பார்க்கும் போது டியூவல்-டிஸ்ப்ளே செட்டப் மற்றும் முக்கோண வடிவிலான ஏசி வென்ட்களுடன் கூடிய டாஷ்போர்டு கான்செப்ட் மாடலைப்போலவே மிக நெருக்கமாகக் காட்சியளிக்கிறது. இதன் தனித்துவமான டிசைன் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. மேலும், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மீடியா கன்ட்ரோல்களுடன் கூடிய த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. தார் OG காரில் இருப்பது போல கேபினுக்குள் சுலபமாக ஏறுவதற்குப் பிடிமான கைப் பிடியும் வழங்கப்பட்டுள்ளது.

டாஷ்போர்டைப் பொறுத்தவரை டச்-சப்-காம்பேக்ட் SUV சந்தையில் போட்டிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மஹிந்திரா நிறுவனம் இந்த செக்மென்ட்டிற்காக மற்றொரு புதிய தயாரிப்பைத் தயார் செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட விஷன் S கான்செப்ட் மாடலை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய கார் உருவாகிறது. விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய மஹிந்திரா SUV, XUV 3XO மற்றும் பிற சப்-4m SUV கார்களுக்கு இணையான ஒரு மாடலாக சந்தையில் விஷன் S பெயரில் களம் காணவுள்ளது.

எதிர்பார்க்கப்படும் பவர்டிரெயின்
2027 ஆம் ஆண்டில் விஷன் S கார் உற்பத்தியைத் தொடங்கும்போது அதன் பவர்ட்ரெய்ன் விவரங்களை மஹிந்திரா அதிகாரப்பூர்வமாக வெளியிடும். இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்களின்படி இந்த கார் நிறுவனத்தின் NU_IQ பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும். இதில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். மேலும் இதன் முழுமையான எலக்ட்ரிக் பதிப்பு பின்னரே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| குறிப்பு: விஷன் S மாடலானது தனது சகோதர மாடலான XUV 3XO-வில் உள்ள அதே 1.2-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களைப் பெற்று வர வாய்ப்புள்ளது. இருப்பினும், இதன் அட்வென்ச்சர் உணர்வை அதிகரிக்கும் வகையில் 4x4 திறன்களுடன் வெளிவந்து தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடிக்கக்கூடும். |
போட்டியாளர்கள்
மஹிந்திரா விஷன் S மாடலானது சப்-4m பிரிவில் மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, கியா சோனெட் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களுக்குப் போட்டியாகக் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இதன் ரெட்ரோ-கூல் மற்றும் ஆஃப்-ரோடு சார்ந்த டிசைனைக் கருத்தில் கொள்ளும்போது இந்த விலை வரம்பில் மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் OG ஆகிய கார்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகவும் விஷன் S விளங்கக்கூடும்.
கார்தேக்கோவின் கருத்து...
மஹிந்திரா விஷன் S கார், தனது ரெட்ரோ-கூல் தோற்றம் மற்றும் பாக்ஸி வடிவ சிலுஹெட் மூலமாக தற்போது இந்த செக்மென்ட்டில் உள்ள பிற போட்டியாளர்கள் வழங்காத ஒரு புதிய அனுபவத்தைக் கொண்டு வரவுள்ளது. இந்த பிரிவில் கரடுமுரடான மற்றும் ஆஃப்-ரோடு அனுபவத்தை விரும்பும் எவருக்கும், இது ஒரு சிறந்த சப்-காம்பேக்ட் SUV-யாக இருக்கக்கூடும்.
தற்போதைய ஸ்பை படங்கள் மூலம், காரின் இன்டீரியர் தயாரிப்பு பதிப்பிற்கு மிக நெருக்கமாக இருப்பது தெளிவாகிறது. பெரும்பாலான டிசைன் மற்றும் உபகரணங்கள் கடந்த ஆண்டு மஹிந்திரா காட்டிய கான்செப்ட் மாடலையே ஒத்துள்ளன. நவீனமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் முக்கோண வடிவ ஏசி வென்ட்கள், புதிய த்ரீ-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் டச் அடிப்படையிலான க்ளைமேட் கன்ட்ரோல் பேனல் போன்ற சில சுவாரஸ்யமான ஸ்டைலிங் அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
சப்-4m SUV கார்களின் பிரம்மாண்ட சந்தையில் இது எந்த அளவுக்குப் போட்டியிடுகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.














