• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாது... டெல்லி அரசின் கெடுபிடி ரூல்!

    வரும் நவம்பர் 1 முதல் டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்குள் (NCT) பிரீ-BSVI வாகனங்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

    ved
    ved
    published on அக்டோபர் 23, 2026 20:32 ist
    info icon
    published onOct 23, 2026 20:32 IST
    last updated onOct 23, 2026 20:32 IST
    8 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Delhi BS6 Winter Action Plan

    டெல்லி-என்சிஆர் பிராந்தியத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பாகக் குளிர்காலத்தில், மோசமான காற்று மாசுபாடு ஏற்படுவது வழக்கமான ஒன்றாக மாறியுள்ளது. வாகனங்கள் வெளியிடும் புகை, விவசாயக் கழிவுகள் எரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் என இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இதன் பாதிப்பைக் குறைக்கும் வகையில் டெல்லி அரசு புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பொதுமக்களையும் அவர்களின் வாகனங்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாகப் பார்ப்போம்.

    நவம்பர் முதல் டெல்லி-என்சிஆர் பகுதிக்குள் பிரீ-BSVI வாகனங்களுக்குத் தடை

    புதிய குளிர்கால நடவடிக்கை திட்டத்தின் படி எடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய முடிவாக பாரத் ஸ்டேஜ் VI உமிழ்வு விதிகளுக்கு உட்படாத வாகனங்கள், 2026 நவம்பர் 1 முதல் 2027 பிப்ரவரி 28 வரை டெல்லி தேசிய தலைநகர் பகுதிக்குள் நுழைவதற்கும் இயங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    Mahindra XUV 7XO

    இந்தத் தடையானது இருசக்கர வாகனங்கள், கார்கள், வணிக ரீதியிலான டிரக்குகள் மற்றும் பஸ்கள் உட்பட அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏப்ரல் 1, 2020-க்கு முன் விற்பனை செய்யப்பட்ட எந்தவொரு காரும் டெல்லி-என்சிஆர் சாலைகளில் இயங்க அனுமதி இல்லை என்பது தெளிவாகிறது. இதுதவிர 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு NGT விதித்துள்ள தடையும் வழக்கம்போல் அமலில் இருக்கும்.

    ‘PUC இல்லை என்றால், ஃபியூயல் இல்லை’

    அதிகாரப்பூர்வ வீடியோவில் காலாவதியான PUC வைத்திருக்கும் வாகனங்களுக்குக் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் வழங்கத் தடை விதிக்கப்படுவதாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

    Kia Seltos

    இந்தத் தடையை அமல்படுத்தும் முறை மற்றும் அதன் எல்லை குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் சிரமங்களைத் தவிர்க்கவும் சட்டத்திற்குட்பட்டு நடக்கவும் உங்கள் வாகன ஆவணங்களைச் சரிபார்த்து, தேவைப்பட்டால் PUC-யை புதுப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    மேற்கொள்ளப்பட உள்ள பிற நடவடிக்கைகள்

    பழைய வாகன உரிமையாளர்கள் சில அசௌகரியங்களைச் சந்திக்க நேரிடும் என்றாலும், மாசுபாட்டைக் குறைக்க மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன:

    • பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் டெல்லி மெட்ரோ சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    • கட்டுமானப் பணிகள், இடிப்புப் பணிகள் மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டு, AI கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    • அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் இருதரப்பிற்கும் 50 சதவீத வொர்க்-ஃப்ரம்-ஹோம் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    • போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அலுவலக நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை:

    டெல்லி முதல்வர் சமூக வலைதள வீடியோ மூலம் இந்த நடவடிக்கைகளை அறிவித்துள்ள போதிலும், இது தொடர்பான டெல்லி அரசின் அதிகாரப்பூர்வ அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை.

    கார்தேக்கோ சொல்வது...

    டெல்லியில் குளிர்கால காற்று மாசுபாடு பிரச்னை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது, ஒவ்வொரு சீசனிலும் AQI அளவுகள் புதிய உச்சங்களைத் தொடுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது இந்த புதிய நடவடிக்கை திட்டம் சரியான திசையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான அடியாகத் தெரிகிறது. குறிப்பாக PUC போன்ற எளிய ஆவணங்களைப் புதுப்பிப்பதில் நிலவும் அலட்சியப்போக்கை போக்க இது உதவும். இருப்பினும் அரசு இந்த நடவடிக்கைகளை எந்த அளவுக்கு உறுதியாக அமல்படுத்தி இந்த ஆண்டு காற்றின் தரத்தில் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வரப் போகிறது என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

    டெல்லியின் இந்த புதிய குளிர்கால நடவடிக்கை திட்டம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்!

    was this article helpful ?

    ved
    Ved Kulkarni is a Correspondent with CarDekho Group, and an automotive journalist with over 5 years of experience under his belt covering cars, motorcycles, mobility solutions and everything in between. A Product Design graduate, he specialises in analysing market trends, testing cars, creating automotive content and gathering customer insights. His love for vehicles began early, and he has vast hands-on experience with everything from classic cars to imported exotics and even the regular mass market vehicles. His technical expertise, combined with a deep-rooted passion for all things automotive, helps give buyers holistic and knowledgeable advice. மேலும் படிக்க

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience