• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    ஆட்டோ எக்ஸ்போ 2016 க்கு முன்னதாகவே கோ க்ராஸ் வாகனங்களின் கான்செப்ட் டீசரை டாட்சன் வெளியிட்டது.

    மிகவும் எதிர்பார்க்கப்படும் 2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே தங்களது  கோ க்ராஸ் கான்சப்ட் வெர்ஷனின் டீசரை டாட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் முதலில் கடந்த வருட டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த கோ க்ராஸ் வாகனங்கள் தனது பளிச்சென்ற தோற்றத்தால்  அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. க்ராஸ்ஓவர்/ காம்பேக்ட் SUV கார்களுக்கு இந்திய சந்தையில் தற்போது நிலவி வரும் பெரிய வரவேற்பின் காரணமாக இந்த  கோ க்ராஸ் வாகனங்கள் இந்திய சந்தையில் திட்டமிட்டதை விட முன்னதாகவே அறிமுகப்படுத்தலாம் என்பதை இந்த டீஸர் வெளியீடு நமக்கு சூசகமாக தெரிவிக்கிறது.   

    saad
    saad
    published on ஜனவரி 19, 2016 12:59 ist
    info icon
    published onJan 19, 2016 12:59 IST
    last updated onJan 19, 2016 12:59 IST
    30 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மிகவும் எதிர்பார்க்கப்படும் 2016 ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாகவே தங்களது  கோ க்ராஸ் கான்சப்ட் வெர்ஷனின் டீசரை டாட்சன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. முதல் முதலில் கடந்த வருட டோக்கியோ மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த கோ க்ராஸ் வாகனங்கள் தனது பளிச்சென்ற தோற்றத்தால்  அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. க்ராஸ்ஓவர்/ காம்பேக்ட் SUV கார்களுக்கு இந்திய சந்தையில் தற்போது நிலவி வரும் பெரிய வரவேற்பின் காரணமாக இந்த  கோ க்ராஸ் வாகனங்கள் இந்திய சந்தையில் திட்டமிட்டதை விட முன்னதாகவே அறிமுகப்படுத்தலாம் என்பதை இந்த டீஸர் வெளியீடு நமக்கு சூசகமாக தெரிவிக்கிறது. 

     தற்போது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும்  கோ+ MPV வாகனங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே ப்லேட்பார்மின் அடிப்படையை கொண்டு இந்த கோ க்ராஸ் கார்களும் தயாரிக்கப்பட உள்ளது.  இந்த வாகனத்தின் முன்புற தோற்றத்தைப் பார்க்கையில், ஒரு ஆக்ரோஷமான , கட்டுறுதி மிக்க ஒரு க்ராஸ்ஓவர் வாகனத்தின் தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதே சமயம் , ஸ்டைலான அல்லாய் சக்கரங்கள் மற்றும் உடல் பகுதி க்லேடிங் இவைகளைப் பார்க்கையில் ஒரு  சுத்தமான க்ராஸ்ஓவர் கார் இது என்று நம்மை நினைக்க  வைக்கிறது. உட்புற வடிவமைப்பு விவரங்களை டாட்சன் இன்னும் வெளியிடவில்லை என்றாலும் நிச்சயம் ஏராளமான அதி நவீன தொழில் நுட்ப அம்சங்கள் போதும் போதும் என்னும் அளவுக்கு இந்த வாகனத்தின் உள்ளே அடுக்கப்பட்டிருக்கும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.  5 – இருக்கை அல்லது 7 – இருக்கை க்ராஸ்ஓவர் வெர்ஷனாக அல்லது இரண்டு வெர்ஷன்களுமே வெவ்வேறு ட்ரிம்களில் வெளியிடப்படலாம் என்றும் யூகிக்கப்படுகிறது.

    இந்த அறிமுகமாக உள்ள கோ க்ராஸ், 1.2 லிட்டர் 3 - சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படும் என்று தெரிகிறது. 65 PS  அளவு கூடுதல்  ஆற்றல் மற்றும் 104nm அளவு டார்கையும் வெளியிடும் வகையில் இந்த என்ஜின் ட்யூன் செய்யப்பட்டு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   கோ + கார்களில் உள்ள 5 வேக கியர் பாக்ஸ் வசதி இந்த புதிய கோ க்ராஸ் வாகனங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    கோ க்ராஸ் வாகனங்களைத் தவிர இந்த ஜப்பானிய கார் தயாரிப்பாளர்கள் தங்களுடைய ரெடி - கோ  ஹேட்ச்பேக் கார்களையும் காட்சிக்கு வைப்பார்கள் என்று தெரிய வருகிறது. இந்த சிறிய கார் ஒரு ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காராக இருக்கும் என்று தெரிகிறது. நிஸ்ஸான்- ரெனால்ட் CMF பிளாட்பார்மை பயன்படுத்தி  உருவாக்கப்பட உள்ள  இந்த சிறிய கார்கள் , ரெனாட் க்விட் கார்களில் பயன்படுத்தப்படும் அதே என்ஜின் பொருத்தப்பட்டு வெளியாகும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

    மேலும் வாசிக்க 

    was this article helpful ?

    saad
    <p><span>As a technology enthusiast, Saad has plenty of strings to his bow. An ardent follower of knowledge, he loves to devote himself to the trending technologies in the market. The curiosity to gain knowledge, which cannot be stolen, made him dive into the field of writing. Never thought he would join the bandwagon of automobile journalists. But as he has entered this stream, chasing inside stories from Tata Nano to German luxuries and British supercars, has now become his passion. Besides honing his writing skills, his job at Cardekho is to maintain the integrity of news and articles.</span></p>மேலும் படிக்க

    Write your Comment on Datsun கோ Cross

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எம்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    • denza d9
      denza d9
      Rs.1 - 1.10 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • denza z9 ஜிடி
      denza z9 ஜிடி
      Rs.1.25 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா தார் இ
      மஹிந்திரா தார் இ
      Rs.25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw chery icar v23
      jsw chery icar v23
      Rs.20 - 25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw jaecoo j5 இவி
      jsw jaecoo j5 இவி
      Rs.20 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience