BE 6 ஸ்போர்ட்டெக்: உங்கள் பார்வைக்கு முழுமையான விவரங்கள்
BE 6 மாடலிலேயே ஏராளமான வசதிகள் நிரம்பியுள்ளன. ஆனால் ஸ்போர்ட்டெக் இன்னும் ஒரு படி மேலே உள்ளது.
- ஒரு கருத்தை எழுதுக

மஹிந்திரா தனது BE 6 எலக்ட்ரிக் SUV லைன்அப்பை புதிய ஸ்போர்ட்டெக் வேரியண்ட் குடும்பத்தை அறிமுகப்படுத்திப் புதுப்பித்துள்ளது. ஏற்கனவே உள்ள ஃபார்முலா E லைன்அப்புடன் இந்த புதிய ஸ்போர்ட்டெக் வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. இது வாடிக்கையாளர்களுக்குப் புதிய பேட்டரி தேர்வுகள் பிரத்யேக நிறங்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப வசதிகளை வழங்குகிறது.
மேலும், இது ஸ்போர்ட்டெக் த்ரீ மற்றும் ஸ்போர்ட்டெக் ஃபோர் -ஐ அடிப்படையாகக் கொண்டு ஃபார்முலா இ மற்றும் ஃபார்முலா E ஃபிரீடம் என இரண்டு வகைகளில் ஃபார்முலா E வரிசையுடனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
BE 6 ஸ்போர்ட்டெக் லான்ச் எடிஷனின் விவரங்களை அறிமுக நிகழ்வின் புகைப்படங்களில் இங்கே பார்க்கலாம்:
டிசைன் மற்றும் வெளிப்புறம்
முன்பக்கம்
-
மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக் அதன் கூர்மையான மற்றும் எதிர்கால டிசைனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது

-
C-வடிவ LED DRL-களும் டூயல் LED ஹெட்லேம்ப்களும் இதன் ஆக்ரோஷமான தோற்றத்தை மேலும் மெருகூட்டுகின்றன.
-
டீசரில் நாம் பார்த்தது போல இந்த ஸ்போர்ட்டெக் மாடலில் லான்ச் எடிஷனுக்கு பிரத்யேகமான புதிய கிராஃபைட் ஸ்டோன் ஷேட் இடம்பெற்றுள்ளது.
-
மேலும் 7XO மாடலின் புதிய ரூபி வெல்வெட் ஷேடும் காட்சிப்படுத்தப்பட்டு இந்த SUV -யின் ஸ்போர்ட்டி தன்மையை மேலும் மேம்படுத்துகிறது.

-
முன்புறத்தில் உள்ள ஃபிரங்க்- ல் அன்றாடப் பொருட்களை எடுத்துச் செல்லப் போதுமான இடம் உள்ளது.

பக்கவாட்டு தோற்றம்
-
கூர்மையான மடிப்புகள் மற்றும் ஜன்னல் கோடு ஆகியவை அதன் ஆக்ரோஷமான தோற்றத்தை மேலும் மேம்படுத்துகின்றன.

-
கருமையாக்கப்பட்ட வெளிப்புறப் பின்புறக் கண்ணாடிகள், கதவுகளுடன் சமமாகப் பொருந்தும் ஹேண்டில்கள் மற்றும் 19-இன்ச் ஏரோடைனமிலக் சக்கர அமைப்பு உள்ளது.

-
கூரை பின்புறம் நோக்கி மென்மையாகச் சரிவாக இருப்பதால் ஃபாஸ்ட்பேக் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
-
எடுப்பாகத் தெரியும் சக்கர வளைவுகளும் அடர்த்தியான கருப்பு உறையும் அதன் ஆக்ரோஷமான தோற்றத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன.
பின்பக்கம்
-
மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக் -ன் பின்புறம் டெயில்கேட்டின் வெளி விளிம்புகளில் செங்குத்தாகப் பொருத்தப்பட்ட LED C-வடிவ டெயில் லேம்ப்களுடன் ஒரு கூர்மையான எதிர்காலத் தோற்றத்தைப் பெறுகிறது. தனிப்பயனாக்கக்கூடிய இந்தப் புதிய டெயில் லேம்பும் ஒரு சிறப்பம்சமாகும்!.

-
பின்பக்கக் கதவு சுத்தமாகவும் பெரும்பாலும் மூடப்பட்டும் உள்ளது. மேலும் அதன் மையத்தில் மஹிந்திராவின் ஒரு நேர்த்தியான நிறுத்த விளக்கு இடம்பெற்றுள்ளது.
-
செதுக்கப்பட்ட கீழ் பம்பர் பிளாக் கிளாடிங் மற்றும் கோண வடிவ விவரங்களுடன் இணைந்து பின்புறத்திற்கு அகலமான, உறுதியான தோற்றத்தை அளிக்கிறது.
-
கூர்மையாக வெட்டப்பட்ட கீழே மூலைகளும் பம்பரின் கீழ்ப்பகுதியில் உள்ள வெள்ளி நிற அம்சமும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை மேலும் கூட்டுகின்றன.
உள்பக்கம்
-
முக்கிய சிறப்பம்சம் XEV 9e மற்றும் XEV 9s மாடல்களில் நாம் பார்த்ததைப் போன்ற புதிய 12.3-இன்ச் பயணிகள் டிஸ்ப்ளே ஆகும்.


-
புதிய ரேசிங்-டான் உட்புற வடிவமைப்பு கொண்ட டாஷ்போர்டு, டோர் பேட்கள் மற்றும் இருக்கைகள், உட்புறத்திற்கு ஒரு உயர்தரத் தோற்றத்தை கொடுக்கின்றன.


-
ஓட்டுநர் பக்க ஹாலோ இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் இப்போது நேரான இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது.

-
விமானத்தைப் போன்ற கட்டுப்பாட்டுக் கருவிகளும் கியர் நெம்புகோலும் இந்த எஸ்யூவியின் தனித்துவமான தோற்றத்திற்கு மேலும் மெருகூட்டுகின்றன.


-
வசதிக்காக பின்புற ஏசி வென்ட்ஸ், கோப்பைத் தாங்கிகளுடன் கூடிய கைத்தாங்கிகளும் வழங்கப்பட்டுள்ளன.


-
ஒளிரும் வடிவமைப்புடன் கூடிய ஒரு பெரிய கண்ணாடிக் கூரை கேபினின் பயண அனுபவத்தை மேலும் மெருகூட்டுகிறது.

-
உங்கள் நீண்ட பயணத்திற்கான சாமான்களை எடுத்துச் செல்ல டிக்கி விசாலமாகவும் போதுமானதாகவும் உள்ளது.

கலர் ஆப்ஷன்கள்
BE 6 ஸ்போர்ட்டெக் ஒன்பது வண்ணத் தேர்வுகளில் வழங்கப்படுகிறது:
-
ரூபி வெல்வெட் (புதியது)
-
ரோஸோ இம்பல்ஸோ (புதியது)
-
கிராஃபைட் ஸ்டார்ம் (புதியது)
-
டாங்கோ ரெட்
-
ஃபயர்ஸ்டார்ம் ஆரஞ்சு
-
டீப் ஃபாரஸ்ட்
-
டெசர்ட் மிஸ்ட்
-
எவரெஸ்ட் ஒயிட்
-
ஸ்டெல்த் பிளாக்
ரோஸோ இம்புல்ஸோ மற்றும் கிராஃபைட் ஸ்டார்ம் வண்ணங்கள் முறையே ஃபார்முலா இ எடிஷன் மற்றும் லான்ச் எடிஷன் வகைகளுக்கு மட்டுமே பிரத்தியேகமானவை.
பாதுகாப்பு அம்சங்கள்
பாதுகாப்பைப் பொறுத்தவரை BE 6 ஸ்போர்ட்டெக் மாடலில் இப்போது 7 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது இந்த செக்மென்ட்டில் ஒரு நல்ல பாதுகாப்பு அம்சமாகும். மிக முக்கியமாக 'ரிவைவ் SOS மோட்' (Revive SOS mode) என்ற புதிய ஃபீச்சர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரி சார்ஜ் மிகவும் குறைவாக இருக்கும் அவசர காலங்களில் இந்த மோட் சிறிது தூரம் பயணிக்கக் கூடுதல் ரேஞ்சை வழங்கும். இது பயணத்தின்போது மன அமைதியை உறுதி செய்யும் ஒரு முக்கியமான அம்சமாகும்.
பவர்டிரெய்ன் மற்றும் பேட்டரி தேர்வுகள்
புதிய ஸ்போர்ட்டெக் சீரிஸ் வாடிக்கையாளர்களுக்குப் பல பேட்டரி பேக் தேர்வுகளை வழங்குகிறது. ஏற்கனவே உள்ள 59 kWh மற்றும் 79 kWh பேட்டரி பேக்குகளுடன்,இப்போது புதிதாக 70 kWh பேட்டரி பேக் ஆப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.
| பேட்டரி பேக் |
59 kWh |
70 kWh |
79 kWh |
| எலக்ட்ரிக் மோட்டார்களின் எண்ணிக்கை |
1 |
1 |
1 |
| கிளைம்டு ரேஞ்ச் (MIDC Part 1 + Part 2) |
548 கிமீ |
651 கிமீ |
683 கிமீ |
| பவர் |
232 PS |
245 PS |
286 PS |
| டார்க் |
380 Nm |
380 Nm |
380 Nm |
விலை மற்றும் வேரியண்ட்கள்
மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக் வரிசையில் 5 வேரியண்ட்கள் உள்ளன: ஸ்போர்ட்டெக் ஒன், ஸ்போர்ட்டெக் டூ, ஸ்போர்ட்டெக் த்ரீ, ஸ்போர்ட்டெக் ஃபோர் மற்றும் ஒரு சிறப்பு லான்ச் எடிஷன். விலையைக் குறைப்பதற்கா கமஹிந்திரா பேட்டரி-ஆஸ்-எ-சர்வீஸ் (BaaS) என்ற புதிய விலை நிர்ணய முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் காரை பேட்டரி இல்லாமல் குறைந்த விலையில் வாங்கிவிட்டு பேட்டரியை மாதாந்திர சந்தா அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
| மஹிந்திரா BE 6 |
||||
|---|---|---|---|---|
| வேரியன்ட் |
59 kWh |
70 kWh |
79 kWh |
|
| BaaS உடன் |
BaaS இல்லாமல் |
BaaS இல்லாமல் |
BaaS இல்லாமல் |
|
| ஸ்போர்ட்டெக் ஒன் |
ரூ 11.45 லட்சம் + Rs 3.75 per km |
ரூ 19.45 லட்சம் |
- |
- |
| ஸ்போர்ட்டெக் டூ |
ரூ 12.95 லட்சம் + Rs 3.75 per km |
ரூ 20.95 லட்சம் |
- |
- |
| ஸ்போர்ட்டெக் த்ரீ |
- |
ரூ 21.95 லட்சம் |
ரூ 22.95 லட்சம் |
- |
| ஸ்போர்ட்டெக் த்ரீ பிளஸ் |
- |
ரூ 23.95 லட்சம் |
ரூ 24.95 லட்சம் |
|
| ஸ்போர்ட்டெக் ஃபோர் |
- |
- |
ரூ 26.95 லட்சம் |
|
| ஸ்போர்ட்டெக் லாஞ்ச் எடிஷன் |
- |
- |
- |
ரூ 26.95 லட்சம் |
*அனைத்தும் ஷோரூம் விலைகள்
-
BE 6 ஸ்போர்ட்டெக் மாடல்களின் விலை ரூ. 19.45 லட்சம் முதல் ரூ. 26.95 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது.
போட்டியாளர்கள்
இந்திய எலக்ட்ரிக் SUV சந்தையில் மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக், டாடா ஹேரியர் EV, ஹூண்டாய் க்ரெட்டா EV (வரவிருக்கும்) மற்றும் MG ZS EV போன்ற கார்களுக்குப் போட்டியாக அமையும். அதன் தனித்துவமான டிசைன் புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் பல பேட்டரி தேர்வுகள் ஆகியவை இந்தப் போட்டியில் தனித்து நிற்க உதவும்.
கார்தேக்கோ சொல்வது…
புதிய மஹிந்திரா BE 6 ஸ்போர்ட்டெக் நவீன தொழில்நுட்பம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான பேட்டரி தேர்வுகளை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது. குறிப்பாக 12.3-இன்ச் பேசஞ்சர் டிஸ்ப்ளே மற்றும் ரிவைவ் SOS மோட் போன்ற அம்சங்கள் இதை ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக மாற்றுகின்றன. அதே சமயம் ஏற்கனவே உள்ள ஃபார்முலா E லைன்அப் ஆனது நிரூபிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் ஒரு நிலையான பேக்கேஜை விரும்புவோருக்குப் பொருத்தமானதாக இருக்கலாம். BaaS ஆப்ஷன் ஆரம்பக்கட்ட விலையைக் குறைக்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.














