டாடா டிகோர் இவி
டாடா டிகோர் இவி விலை & வகைகள்
Tigor EV-ல 4 வேரியண்ட்ஸ் இருக்கு, ₹12.49L-ல இருந்து ஆரம்பம், எல்லாத்துக்கும் ஒரே 26 kWh பேட்டரி தான், 315 km ARAI ரேஞ்சும் 59-minute DC ஃபாஸ்ட் சார்ஜும் தருது. XE (₹12.49L) தினசரி காம்யூட்டுக்கு சரியா இருக்கு, dual airbags, ABS, பேட்டரி நிலையை ஒரே பார்வையில காட்ற டிஜிட்டல் கிளஸ்டரும் இருக்கு. XT (₹12.99L)-ல 17.78cm HARMAN டச்ஸ்கிரீன் வருது, வயர்லெஸ் Apple CarPlay உம் ஸ்டீயரிங் கண்ட்ரோல்ஸும் இருக்கு, டிராஃபிக்ல ஃபோனை எடுத்து அவஸ்தைப்படுற வேலை போச்சு. XZ Plus (₹13.49L)-ல ஆட்டோ கிளைமேட், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் கீ புஷ் ஸ்டார்ட், சூடான மதியத்துலயும் வாட்டர் பாட்டிலை குளிர்ச்சியா வெச்சிருக்குற கூல்டு கிளவ்பாக்ஸும் வருது. XZ Plus LUX (₹13.75L)-ல லெதரெட் சீட்ஸ் மற்றும் ஃபுல் ப்ரீமியம் பேக் கிடைக்குது. பெரும்பாலான பயர்ஸ் XZ Plus (₹13.49L)-ல தான் செட்டில் ஆகுறாங்க, CarPlay ஓட டச்ஸ்கிரீன், ஆட்டோ கிளைமேட், க்ரூஸ் கண்ட்ரோல், 315 km ரேஞ்ச் எல்லாம் கிடைக்குது, XZ Plus LUX-ஓட லெதரெட் அப்ஹோல்ஸ்டரிக்காக ~₹26K கூடுதலா செலவழிக்காம.
டாடா டிகோர் இவி விவரங்கள் மற்றும் பிட்டுறேஸ்
| ரேஞ்ச் | 315 km |
| பவர் | 73.75 பிஹச்பி |
| பேட்டரி திறன் | 26 kwh |
| கட்டணம் வசூலிக்கும் நேரம் டிஸி | 18 kW சார்ஜர்டன் 59 நிமிடங்கள் (10-80%) |
| கட்டணம் வசூலிக்கும் நேரம் ஏசி | 3.3 kW சார்ஜர்டன் 9 மணி (0-100%) |
| பூட் ஸ்பேஸ் | 316 லிட்டர்ஸ் |
டிகோர் இவி 2026: லேட்டஸ்ட் updates
விலை: இதன் விலைகள் ரூ. 12.49 லட்சம் முதல் ரூ. 13.75 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா).
வேரியண்ட்கள்: XE, XT, XZ+ மற்றும் XZ+ Lux ஆகிய நான்கு டிரிம்களில் Tata வழங்குகிறது.
நிறங்கள்: டிகோர் EV மூன்று மோனோடோன் ஷேட்களில் கிடைக்கிறது: டேடோனா கிரே, சிக்னேச்சர் டீல் ப்ளூ மற்றும் மேக்னடிக் ரெட்.
பேட்டரி, எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் ரேஞ்ச்: நெக்ஸான் EV இல் உள்ள அதே ஜிப்ட்ரான் EV தொழில்நுட்பத்துடன் டிகோர் EV வருகிறது. இது 75PS மற்றும் 170Nm ஆற்றலை வெளிப்படுத்தும் மின்சார மோட்டாருடன் 26kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. எலெக்ட்ரிக் செடான் இப்போது ARAI -யால் கிளைம் செய்யப்படும் புதுப்பிக்கப்பட் 315 கிமீ ரேஞ்ச் -ஐக் கொண்டுள்ளது.
சார்ஜிங்: ஸ்டாண்டர்டு வால் சார்ஜரைப் பயன்படுத்தினால் 8.5 மணிநேரத்திலும், 25kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தினால் 60 நிமிடங்களிலும் டிகோர் EV -யை 0 விலிருந்து இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
அம்சங்கள்: டாடா டிகோர் EV -யில் நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் சம எண்ணிக்கையிலான ட்வீட்டர்கள், மல்டி-மோட் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ ஏசி, உயரத்தை சரிசெய்யக்கூடிய டிரைவர் இருக்கை மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பத்துடன் ஏழு அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு: முன்பக்கத்தில் இரட்டை ஏர்பேக்குகள், EBD உடன் ABS, டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), டயர் பஞ்சர் ரிப்பேர் கிட், ஹில் கிளைம்பிங் ஆசென்ட்/டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் பின்புறக் காட்சி கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்: இப்போதைக்கு, டாடா டிகோர் EV -க்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை, ஆனால் இது டாடா டியாகோ EV மற்றும் சிட்ரோன் eC3 -க்கு ஒரு பிரீமியம் மாற்றாகக் கருதப்படலாம்.
டிகோர் இவி expert விமர்சனம்
நாம் விரும்பும் விஷயங்கள்
- 170-220 கிமீ யதார்த்தமான ரேஞ்ச் சிட்டி கம்யூட்டர் ஆக இதை மாற்றுகின்றது
- 0-80% ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் நேரம் 65 நிமிடங்கள்.
- வசதியான சவாரி தரம் அலைவுகளை நன்றாக சமாளிக்கின்றது.
நாம் விரும்பாத விஷயங்கள்
- ஸ்பேர் வீல் பூட் பகுதியில் வைக்கப்பட்டுள்ளதால், கிடைக்கும் இடத்தைக் குறைக்கிறது.
- வசதி குறைபாடுகள்: அலாய் வீல்கள், லெதர்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல், ரியர் அட்ஜட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள்
- ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான டிகோருக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உட்புறத் தரம், ரூ.13 லட்சம் டிகோர் EV-க்கு ஏற்றதாக இல்லை.
டாடா டிகோர் இவி விமர்சனம்
மேற்பார்வை

எலெக்ட்ரிக் கார்கள் இறுதியாக சாமானிய மக்களுக்கான சந்தையில் அறிமுகமாகின்றன. ஒவ்வொரு நாளும் நீங்கள் இயல்பாக பயன்படுத்தக்கூடிய ஒரு காரை வாங்க இனிமேல் ரூ. 20 லட்சத்திற்கு மேல் செலவழிக்க வேண்டியதிருக்காது. மிக முக்கியமாக இந்திய நிறுவனமான டாடா இந்த மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது. நெக்ஸான் EV -தான் இப்போது இந்தியாவின் EV பிரிவில் டாப் ஸ்டார் ஆக உள்ளது.
அதன் தொடர்ச்சிதான் டிகோர் EV ஆகும். இது தற்போது நீங்கள் தனியார் பயன்பாட்டிற்கு வாங்கக்கூடிய இந்தியாவில் மிகவும் விலை குறைவான எலக்ட்ரிக் கார் ஆகும். எலக்ட்ரிக் என்ற அந்த ஒரு காரணம் போதுமா? அல்லது இந்த பிரிவில் வேறு ஏதேனும் கார்கள் இருக்கின்றனவா ?
வெளி அமைப்பு
நிச்சயமாக டிகோர் EV நுட்பமாக தனித்து தெரிகின்றது. டீப் டீல் ப்ளூ ஷேட் ஒரு மிரட்டலான தோற்றத்தை இதற்கு கொடுக்கின்றது. ஆனால் டேடோனா கிரே கலர் ஆப்ஷனை பார்த்தால், டாடா வித்தியாசத்தைக் கவனிக்க உங்களைத் தூண்டுகிறது.
'ட்ரை-ஆரோவ்' டீடெயில் உடன் புதிய வடிவிலான கிரில் உள்ளது. முன்பக்க பம்பரில் இன்னும் சில விஷயங்கள் உள்ளன. இந்த வடிவமைப்பு அப்டேட்களை தவிர கிரில்லைச் சுற்றியுள்ள மேட் அக்வா-கலர் ஆக்ஸன்ட்கள், ஃபாக் லைட்கள் மற்றும் சக்கரங்கள் மற்றும் பம்பர்களில் உள்ள நுட்பமான ஹைலைட்கள் அனைத்தும் எலக்ட்ரிக் டிகோரை அதன் பெட்ரோல் உடன்பிறப்பிடம் இருந்து தனித்து தெரிய வைக்கின்றன. இங்கே குரோம் கலரை டாடா அதிகமாகப் பயன்படுத்தவில்லை என்பதை நாங்கள் விரும்புகிறோம்; விண்டோ லைன், டோர் ஹேண்டிலில் ஒரு ஸ்பிளாஸ் மற்றும் பூட் ஆகியவற்றில் - சரியாக குரோம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், டேடைம் ரன்னிங் லைட்ஸ் மற்றும் தெளிவான லென்ஸ் டெயில் லைட்ஸ் போன்ற ஹைலைட் எலமென்ட்கள் அப்படியே உள்ளன.

பெட்ரோல் டிகோருடன் ஒப்பிடும்போது வீல்களில் ஒரு தெளிவான மாற்றம் உள்ளது. அலாய் வீல்களை பிரதிபலிக்க முயற்சிக்கும் சிறிய 14-இன்ச் ஸ்டீல் வீல்களுடன் EV உள்ளது. டியாகோ என்ஆர்ஜியின் பழைய மாடலை போலவே வடிவமைப்பு இருப்பது உதவவில்லை. டிகோரின் 15-இன்ச் டூ-டோன் அலாய் வீல்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்.
டிகோரின் வலுவான வடிவமைப்பு EV -க்கு சாதகமாக விளையாடுகிறது. இதை ஒரு எலக்ட்ரிக் கார் என்பதை காட்டுவதை டிகோர் EV அதை ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் செய்கிறது.
உள்ளமைப்பு
டிகோர் EV -யின் கேபினுக்குள்ளும் டாஷ்போர்டில் இன்னும் சில புளூ கலர் ஆக்ஸன்ட்களை கவனிக்கலாம். அவர்கள் ஏசி வென்ட்களை அடிக்கோடிட்டு இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டருக்கும் தங்கள் வழியைக் கொடுத்திருக்கிறார்கள். மற்றொரு வேறுபாடு ஃபேப்ரிக் அமைப்பில் புளூ கலர் ட்ரை-ஆரோவ் வடிவில் வருகிறது. இவற்றை தவிர கேபின் ஸ்டாண்டர்டான டிகோரை போலவே உள்ளது.

இது சிலருக்கு ஏமாற்றமாக இருக்கலாம் ஆனால் 10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள என்ட்ரி-லெவல் செடானில் கடினமான மற்றும் கீறல் விழக்கூடிய பிளாஸ்டிக் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான். ஸ்டீயரிங் வீலுக்கு லெதர் ரேப், இருக்கைக்கான லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் டோர் பேட்களை வழங்குவதன் மூலம் இங்கு அனுபவத்தை மேம்படுத்த டாடா பரிசீலித்திருக்கலாம்.
இடமும் நடைமுறையும் எந்த விதத்திலும் தடைபடவில்லை அதிர்ஷ்டவசமாக ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் ஓட்டுநர் இருக்கை மற்றும் ஸ்டீயரிங்கிற்கான ரிக்ளைனிங்-அட்ஜஸ்ட்மென்ட் மூலம் வசதியான ஓட்டுநர் நிலையைப் பெறுவது ஒப்பீட்டளவில் நேரடியானது. வழக்கமான டிகோர் காரை போலவே டிகோர் EV நான்கு அடி, ஆறு அடி உடைய நபர்கள் யாராக இருந்தாலும் போதுமான இடத்தைக் கொண்டுள்ளது. இடம் தாராளமாக இல்லையெனில் பின்புறத்தில் உள்ள மூன்றாவது இருக்கைக்கு நீங்கள் செல்லலாம். மேலும், ரியர்-அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் இந்த விலைக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகின்றது.

பூட் ஸ்பேஸில் தான் உண்மையான கட்பேக். ஸ்டாண்டர்டான டிகோர் 419-லிட்டர் இடத்தை வழங்கினால், டிகோர் EV 316 லிட்டர் இடத்தை கொண்டுள்ளது. இது உயர்த்தப்பட்ட பூட் ஃப்ளோர் மற்றும் ஸ்பேர் வீல் பூட்டில் வைக்கப்படுவதே காரணமாகும். டிகோர் EV உடன் ஒரு பஞ்சர் ரிப்பேர் கிட்டை டாடா வழங்குகிறது, எனவே உங்களுக்கு பூட் ஸ்பேஸ் உண்மையிலேயே தேவைப்பட்டால் ஸ்பேர் வீலை தவிர்த்து விடலாம். ஸ்பேர் வீல் இல்லாமல் போனால் பூட் ஸ்பேஸ் 376 லிட்டராக உயரும்.
வசதிகள் மற்றும் தொழில்நுட்பம்
பெட்ரோல் டிகோருடன் ஒப்பிடும்போது எந்த வசதிகளும் மாற்றப்படவில்லை. டாப்-ஸ்பெக் XZ+ வேரியன்ட் கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற வசதிகளை பெறுகிறது. இருப்பினும், ஆட்டோ டிம்மிங் IRVM, முன் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட ஸ்டாண்டர்டான டிகோரில் உள்ள வசதிகள் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

'Z Connect' ஆப் மூலம் கனெக்டட் கார் டெக்னாலஜியை டாடா வழங்குகிறது. இந்தப் ஆப் கார் டேட்டாவை (கார் ரேஞ்ச் போன்றவை) அணுகவும், தூரத்தில் இருந்தே ஏர் கண்டிஷனிங்கை தொடங்கவும் உங்களை அனுமதிக்கிறது.
ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் 7 இன்ச் டச் ஸ்கிரீன் அமைப்பையும் பெறுவீர்கள். இது நட்சத்திர 8-ஸ்பீக்கர் ஹர்மன் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக ஓரளவுக்கு வீடியோ அவுட்புட் மற்றும் சில லேக் ஆகியவற்றைக் கொண்ட ரிவர்ஸ் கேமராவிற்கான டிஸ்ப்ளேவாகவும் திரை இரண்டு விதமாக செயல்படுகின்றது.
பாதுகாப்பு
டிகோர் EV ஆனது டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவற்றை ஸ்டாண்டர்டாக பெறுகிறது. குளோபல் NCAP அமைப்பால் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்ட முதல் எலக்ட்ரிக் வாகனமும் இதுவே. சோதனையில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிறப்பான 4 நட்சத்திரங்களைப் பெற்றது.
செயல்பாடு
டிகோர் EV -யை இயக்குவது 26kWh பேட்டரி பேக் ஆகும். புதிய 'ஜிப்ட்ரான்' பவர்டிரெய்ன் என்பது பெர்மனன்ட் சின்க்க்ரோனியஸ் மோட்டார் (75PS/170Nm) ஆகும். இது Xpres-T (டாக்சி சந்தைக்கான டிகோர் EV) -யில் உள் பழைய மாடல் 3-பேஸ் AC இண்டக்சன் மோட்டார் போன்றது அல்ல.

சார்ஜிங் நேரங்கள்:
| ஃபாஸ்ட் சார்ஜ் (0-80%) | 65 நிமிடங்கள் |
| ஸ்லோ சார்ஜ் (0-80%) | 8 மணி 45 நிமிடங்கள் |
| ஸ்லோ சார்ஜ் (0-100%) | 9 மணி 45 நிமிடங்கள் |
பெரும்பாலான நவீன EV களை போலவே டிகோர் EV -யின் 80% பேட்டரியை ஒரு மணி நேரத்திற்கும் சற்று அதிகமான நேரத்தில் டாப் அப் செய்யலாம். இதற்கு 25kW DC ஃபாஸ்ட் சார்ஜர் தேவைப்படுகிறது. இதை நீங்கள் நகரங்களில் உள்ள பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் என எதிர்பார்க்கலாம், தேர்ந்தெடுக்கப்பட்ட டாடா டீலர்ஷிப்கள் மற்றும் சில பெட்ரோல்/டீசல் பம்புகள் கூட இது கிடைக்கலாம்.
வீட்டில் வழக்கமான 15A சாக்கெட் மூலம் டிகோர் EV -யை சார்ஜ் செய்ய 0-100% பேட்டரியை சார்ஜ் செய்ய நீங்கள் கிட்டத்தட்ட 10 மணிநேரம் காத்திருக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது பேட்டரியை 100% சார்ஜ் செய்யுமாறு டாடா பரிந்துரைக்கிறது, மேலும் பேட்டரி ஆயுள் மற்றும் செயல்திறனை உறுதி செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங்கை அதிகம் பயன்படுத்த வேண்டாம். பேட்டரி பேக் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் போதே 8 ஆண்டுகள் / 1,60,000 கிமீ உத்தரவாதத்துடன் வருகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

டிரைவ் மற்றும் ஸ்போர்ட் ஆகிய இரண்டு மோடுகள் உள்ளன. இவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம். தினசரி பயணத்திற்கு ஏற்றவாறு டிரைவ் மோடை சிறப்பாக மாற்றியமைத்துள்ளது டாடா. முடுக்கத்தின் உடனடி இயக்கம் உங்களை இருக்கையில் பொருத்துகிறது என்பதை பெரும்பாலான எலக்ட்ரிக் கார் மதிப்புரைகளில் நீங்கள் படித்திருக்க வேண்டும். வழக்கமான டிரைவ் பயன்முறையில் டிகோர் EV -யில் எதுவுமில்லை. பவர் டெலிவரி சீரானது, நீங்கள் நிதானமாக ஓட்ட அனுமதிக்கிறது.
நகர போக்குவரத்தை நீங்கள் வசதியாகப் பின்பற்றுவதை உறுதிசெய்ய போதுமான சக்தி உள்ளது மற்றும் தேவைப்பட்டால் முந்திக்கொள்ளவும் முடியும். ஒரு ஆவேசமான செயல்திறனை எதிர்பார்க்க வேண்டாம். நாம் ஒரு இணையாக சொல்ல வேண்டுமானால் ஒது ஒரு சிறிய டீசல் இன்ஜின் போல் உள்ளது - சத்தம் அல்லது மாசு உமிழ்வு இல்லாமல்.
ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டத்தை அளவீடு செய்வதிலும் டாடா சிறப்பாக வேலை செய்துள்ளது. இது லேசானது மற்றும் ஆக்சலரேஷன் பெடலில் இருந்து உங்கள் கால்களை உயர்த்தும்போது தடை போன்ற உணர்வை தராது . தற்போதுள்ள நெக்ஸான் EV உரிமையாளர்களின் ஃபீட்பேக் அடிப்படையில் இது மேற்கொள்ளப்பட்டதாக டாடா கூறுகிறது.

ஸ்போர்ட் மோடுக்கு மாறுங்கள் கூடுதல் ஆக்ஸிலரேஷன் உதவியை பெறுவீர்கள். ஆரம்ப ஸ்பைக்கை அனுபவிக்கலாம் ஆனால் ஒருபோதும் அதிகமாக உணராது. இருப்பினும் கவனமாக இருங்கள்; வீல் ஸ்பைக்ஸை ஏற்படுத்தும் அளவுக்கு டார்க் உள்ளது. ஆக்ஸிலரேட்டரை பின் செய்து வைத்திருங்கள் டிகோர் EV ஆனது 5.7 வினாடிகளில் மணிக்கு 0-60 கிமீ வேகத்தை எட்டும் என்று டாடா கூறுகிறது. ஆக்ஸிலரேஷன் 120 கிமீ வேகத்தை அடையும் வரை நிலையானதாக இருக்கும். இங்கே எச்சரிக்கையுடன் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் டிகோர் EV உற்சாகமான வாகனம் ஓட்டுவதைக் கண்டுகொள்ளாமல் இருக்கலாம் ஆனால் டிஸ்டன்ஸ் டூ எம்டி தூரம் குறைவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
அந்தக் குறிப்பில் டிகோர் EV ஆனது மிகவும் துல்லியமான தூரத்திலிருந்து காலியான / பேட்டரி நிலையைப் படிக்க முடியும். டிகோர் EV எங்களுடைய 10 மணி நேர வேலையில் எப்படி இருந்தது என்பதற்கான விரைவான விவரம் இதோ. நாங்கள் சில ஆக்ஸிலரேஷன், பிரேக்கிங் சோதனைகள் மற்றும் அதிக வேக ஓட்டங்களை மேற்கொண்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ளவும்:
| டிரைவிங் புள்ளிவிவரங்கள் | |
| தொடக்க ரேஞ்ச் | 256 கிமீ @ 100% பேட்டரி |
| உண்மையக இயக்கப்பட்ட தூரம் | 76 கி.மீ |
| MID -யில் காட்டப்பட்ட மீதமுள்ள ரேஞ்ச் | 82 கி.மீ @ 42% பேட்டரி |
| சாத்தியமான வரம்பு (மதிப்பீடு) | |
| கடினமான / ஆக்ரோஷமான வாகனம் ஓட்டுதல் | 150-170 கி.மீ |
| நிதானமாக வாகனம் ஓட்டுதல் | 200-220 கி.மீ |
நிச்சயமாக டிகோர் EV ஒரு அமைதியான மற்றும் சாந்தமான முறையில் இயக்கப்படும் போது 200-220கிமீ தூரம் வரை செல்லும் என என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, 45-55 கிமீ வேகத்தை சீராகப் பராமரித்து முடிந்தவரை தாராளமாக ஆக்ஸிலரேட்டரை தூக்கி நிறுத்தும் அதே வேளையில், தடையற்ற போக்குவரத்தில் DTE ரேஞ்சில் எந்தப் பாதிப்பும் இல்லாமல் ஏறக்குறைய 10 கிமீ தூரத்தை நாங்கள் கடக்க முடிந்தது. கடினமாக டைவிங் செய்தால் ரேஞ்ச் கணிசமாகக் குறையும். மேலும் இந்தச் சூழ்நிலையில் நீங்கள் டிகோரில் இருந்து 150-170 கிமீ தூரம் வரை மறந்து விடலாம் என்று மதிப்பிடுகிறோம்.

இந்த எண்கள் உடனடியாக உங்களை ஆச்சரியப்படுத்தாது. ஆனால் ஒரு சிட்டி கம்யூட்டராக டிகோர் EV ஒரு உறுதியான திட்டத்தை உங்களுக்கு கொடுக்கின்றது. குறிப்பாக உங்களிடம் நிலையான வழக்கமான மற்றும் வீடு மற்றும் அலுவலகம் இரண்டிலும் சார்ஜிங் நிலையத்தின் வசதி இருந்தால். சாமானிய சந்தை EV -களில் பின்-பாயின்ட் திட்டமிடல் இல்லாமல் மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களை மேற்கொள்வதிலிருந்து நாம் இன்னும் சிறிது காலம் தூரத்தில் இருக்கிறோம் என்றே சொல்ல வேண்டும்.
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
டிகோர் பெட்ரோல் AMT உடன் ஒப்பிடும்போது டிகோர் EV -யின் எடையில் கூடுதலாக 200 கிலோ அதிகரித்துள்ளது. இதை சரி செய்ய டாடா பின்புற சஸ்பென்ஷனில் வேலை செய்துள்ளது. ஆகவே விரும்பத்தக்க குஷி சவாரியை அப்படியே வைத்திருக்க முடிந்துள்ளது. கேபினுக்குள் மோசமான சாலை மேற்பரப்பை நீங்கள் உணர்வீர்கள் என்றாலும் கூட அது அமைதியற்றதாகவோ அல்லது சங்கடமாகவோ இல்லை. தொடர்புடைய குறிப்பில் இந்த சத்தத்தை முடக்க சக்கர கவர்களில் சில கூடுதல் இன்சுலேஷன் சேர்ப்பதை டாடா பரிசீலிக்கலாம். ஆழமான பள்ளங்கள் மற்றும் மோசமான சாலைகளில், குறிப்பாக மெதுவான வேகத்தில், டிகோர் EV பக்கவாட்டில் நீங்கள் உணருவீர்கள். அதிவேக நிலைத்தன்மை திருப்திகரமாக உள்ளது. மணிக்கு 80-100 கிமீ வேகத்தில், டிகோர் EV அதிகமாக மிதப்பதாகவோ அல்லது லேசானதாகவோ உணர வைக்கவில்லை.

ஒரு தினசரி பயணத்துக்கு ஸ்டீயரிங் லேசானதாக இருக்க வேண்டும். இது விரைவாக திசையை மாற்ற உதவும். மேலும் சிறிய அளவு என்பதால் போக்குவரத்தில் உள்ள இடைவெளிகளை எளிமையாக கடக்கலாம்.
நீங்கள் டிகோர் EV -யில் பிரேக்குகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பெடல் எந்த உணர்வையும் கொடுக்கவில்லை மற்றும் சக்கரங்களுக்கு உண்மையில் எவ்வளவு பிரேக் ஃபோர்ஸ் மாற்றப்படுகின்றது என்பதை யூகிக்க மட்டுமே உதவும்.
வெர்டிக்ட்
இந்த காரின் விலை என்பது நிச்சயமாக மறுக்க ஒரு முடியாத சமநிலை. ஆனால் இந்த விலை புள்ளியில் கூட டிகோரின் உட்புறத் தரம் மற்றும் அது வழங்கும் வசதிகளால் நீங்கள் சோர்வடையலாம். நிலையான டிகோரிலிருந்து வேறுபடுத்துவதற்கு விவரங்களுக்கு இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தப்பட்டிருக்கலாம்.

இருப்பினும் டிகோர் EV உடன் நேரத்தை செலவிடுவது ஒரு அற்புதமான நகர காராக இருப்பதற்கான அதன் திறனை நிரூபிக்கிறது. உங்கள் பயன்பாட்டில் வேலைக்குச் செல்வதற்கும், திரும்பிச் செல்வதற்கும் வாகனம் ஓட்டுவதைத் தவிர வேறொன்றுமில்லை என்றாலோ அல்லது நகரத்தைச் சுற்றி வேலை செய்ய உங்களுக்கு ஒரு கார் தேவைப்பட்டாலோ இந்த சிறிய EV நிச்சயம் நிறைய அர்த்தமுள்ளதாகத் தெரிகிறது.
பூட் ஸ்பேஸில் ஏற்படும் சிறிய பின்னடைவைத் தவிர்த்து பார்த்தால் எந்த பெரிய சமரசத்தையும் இது கேட்கவில்லை. கூடுதல் பணத்திற்கு ஏற்ற இறக்கமான எரிபொருள் விலையில் இருந்து நிரந்தர விடுதலையைப் பெறுவீர்கள், மேலும் பராமரிப்பிலும் சேமிக்கலாம். இவை அனைத்தும் குறைந்த இயங்கும் செலவுகள் மற்றும் சிறந்த டிரைவ்டிரெய்ன் ஆகியவற்றின் கூடுதல் போனஸுடன் கிடைக்கும்.
டாடா டிகோர் இவி நிறங்கள்
டாடா டிகோர் இவி இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.
சிக்னேச்சர் டீல் ப்ளூ with டூயல் டோன்
மேக்னெட்டிக் ரெட்
டயோட்னா கிரே டூயல் டோன்
comparing டாடா டிகோர் இவி rivals
Rs.12.49 - 13.75 லட்சம்* | Rs.9.79 - 12.99 லட்சம்* | Rs.13.50 - 20 லட்சம்* | Rs.12.09 - 13.36 லட்சம்* | Rs.17.19 - 19.69 லட்சம்* | Rs.13.04 லட்சம்* | Rs.13.89 - 14.96 லட்சம்* | Rs.17.99 - 20.75 லட்சம்* |
| ratingUser Review (98) | User Review (44) | User Review (6) | User Review (88) | User Review (142) | User Review (4) | User Review (11) | User Review (128) |
| ஃபியூல் வகைஎலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் | எலக்ட்ரிக் |
| பேட்டரி திறன்26 kwh | 30 - 40 kwh | 42 - 51.4 kwh | 29.2 kwh | 55 kwh | 32 kwh | 39.4 kwh | 50.3 kwh |
| ரேஞ்ச்315 km | 275 - 355 km | 443 - 526 km | 330 km | 502 km | 391 km | 456 km | 461 km |
| கட்டணம் வசூலிக்கும் நேரம்18 kW சார்ஜர்டன் 59 நிமிடங்கள் (10-80%) | - | 11 kW சார்ஜர்டன் 4 மணி (10-100%) | - | 70 kW சார்ஜர்டன் 40 நிமிடங்கள் (10-80%) | 11.2 kW சார்ஜர்டன் 4.6 மணி | 7.2 kW சார்ஜர்டன் 6 மணி (0-100%) | 7.4 kW சார்ஜர்டன் 9 மணி (0-100%) |
| பவர்73.75 பிஹச்பி | 87 - 127 பிஹச்பி | 133 - 169 பிஹச்பி | 56.22 பிஹச்பி | 165 பிஹச்பி | 35.79 பிஹச்பி | 147.51 பிஹச்பி | 174.33 பிஹச்பி |
| ஏர்பேக்குகள்2 | 6 | 6 | 4-6 | 6 | 2 | 6 | 6 |
| gncap பாதுகாப்பு ratings4 Star | - | - | - | - | - | - | - |
| currently viewing | டிகோர் இவி விஎஸ் பன்ச் இவி | டிகோர் இவி விஎஸ் சிரோஸ் இவி | டிகோர் இவி விஎஸ் e-c3 எக்ஸ் | டிகோர் இவி விஎஸ் கர்வ் இவி | டிகோர் இவி விஎஸ் xpres டி இவி | டிகோர் இவி விஎஸ் எக்ஸ்யூவி 3XO இவி | டிகோர் இவி விஎஸ் எம்ஜி இஸட்எஸ் இவி |
டாடா டிகோர் இவி 2026: லேட்டஸ்ட் செய்திகள் articles
டாடா டிகோர் இவி பயனர் மதிப்புரைகள்
- அனைத்தும் (98)
- தெரிகிறது (22)
- கம்பர்ட் (47)
- மைலேஜ் (6)
- இன்ஜின் (9)
- உள்ளமைப்பு (27)
- space (18)
- விலை (23)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- 2023 Model Tigor OwnerLove this car, very good for small family. Best performance on highway long journey, only cons is power when ac is on full and car is fully loaded. After sales and service is same is for all tata cars avergae. Finishing work of tata cars is also an average. Safety and comfort is best. Boot space is too good. Price in this segment and feature wise is best.மேலும் படிக்க1
- About Car MileageThis car does not provide mileage mileage during summer . Tata is claiming 300 km mileage for full charge and reality on only 120km for full charge during summer... And the next one is car break sometimes break is not working of you will press settled break then the break will we false Or car interior is also very old typeமேலும் படிக்க4 3
- Tata Tigor The Beast...Its a very good car, If you are searching for a electric vehicle you must try this Tata Tigor EV, Its Very Comfortable and I am very happy to have this car...மேலும் படிக்க1
- Ev Nice CarNice electric car just save money and nice looking forward buy another car for my family and friends now can run anywhere with out worries and no more doubtமேலும் படிக்க
- Great Car But Driving Range Could Be BetterPurchased from the Tata store in Chennai, the Tata Tigor EV has been a great choice. The comfy inside of the Tigor EV and silent, smooth drive are fantastic. Its simple, contemporary style is really appealing. Impressive are the sophisticated capabilities including regenerative braking, automated climate control, and touchscreen infotainment system. Two airbags and ABS with EBD among the safety elements give piece of mind. The range is one area that might need work. I wish it was a little longer. Still, the Tigor EV has made my everyday trips pleasant and environmentally friendly.மேலும் படிக்க
- காண்க மேலும்
டாடா டிகோர் இவி Range
| motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன் | அராய் ரேஞ்ச் |
|---|---|
| எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக் | 315 km |
48 hours இல் Ask anything & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) For waiting period, we would suggest you to please connect with the nearest auth...மேலும் படிக்க
A ) The Tata Tigor EV offers a boot space of 316 liters.
A ) Tata Tigor EV is available in 3 different colours - Signature Teal Blue, Magneti...மேலும் படிக்க
A ) The Tata Tigor EV has an ARAI-claimed range of 315 km.
A ) The ground clearance of Tigor EV is 172 mm.

டாடா டிகோர் இவி ஆன்-ரோடு விலை in பிரபலமானவை cities
போக்கு டாடா கார்கள்
- பிரபலமானவை
- உபகமிங்
டாடா aerisRs.5.30 - 9.75 லட்சம்*
டாடா சீர்ராRs.11.49 - 21.59 லட்சம்*
டாடா பன்ச்Rs.5.75 - 10.77 லட்சம்*
டாடா நிக்சன்Rs.7.40 - 14.52 லட்சம்*
டாடா ஹெரியர்Rs.13 - 26.11 லட்சம்*
Popular செடான் cars
- டிரெண்டிங்
- லேட்டஸ்ட்
- உபகமிங்
மாருதி சுசூகி டிசையர்Rs.6.31 - 9.54 லட்சம்*
ஹூண்டாய் வெர்னாRs.10.99 - 18.46 லட்சம்*
வோல்க்ஸ்வேகன் விர்டஸ்Rs.10.71 - 19.20 லட்சம்*
ஸ்கோடா ஸ்லாவியாRs.10 - 18.84 லட்சம்*
ஹோண்டா அமெஸ்Rs.7.65 - 10 லட்சம்*
ஹோண்டா சிட்டிRs.12 - 21.36 லட்சம்*
டாடா xpres டி இவிRs.13.04 லட்சம்*



