• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    ஆகஸ்ட் 7 அன்று அறிமுகத்திற்காக காத்திருக்கும் Tata Curvv EV -ன் இன்டீரியர் விவரங்களுடன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது

    வரவிருக்கும் எஸ்யூவி-கூபே நெக்ஸான் EV, ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவற்றிலிருந்து டூயல்-டிஜிட்டல் டிஸ்ப்ளே செட்-அப் உட்பட பல விஷயங்களைக் கொண்டிருக்கும் என்பதை அதன் கேபின் டீசர் காட்டுகின்றன.

    samarth
    samarth
    published on ஆகஸ்ட் 06, 2024 14:53 ist
    info icon
    published onAug 06, 2024 14:53 IST
    last updated onAug 06, 2024 14:53 IST
    40 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    • டாடா கர்வ் EV-யின் டீஸர் பனோரமிக் சன்ரூஃப், டூயல்-டோன் டேஷ்போர்டு மற்றும் முன்பக்க காற்றோட்ட சீட்கள் போன்ற விஷயங்கள் இருப்பதை காட்டுகிறது.

    • இது 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகள் வழங்கப்படும்.

    • கர்வ் EV இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 500 கிலோமீட்டர் வரை கிளைம் செய்யப்படுகிறது.

    • இதன் விலை ரூ. 20 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் ஆகஸ்ட் 7, 2024 அன்று டாடா கர்வ் EV -யை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. டீசர் மூலம் அதன் வெளிப்புறத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டப் பிறகு டாடா இப்போது அதன் சமூக ஊடக தளத்தில் கேபின் பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிர்ந்துள்ளது. சமீபத்திய படங்கள் கேபின் தீம் காட்சிப்படுத்துவது மட்டுமல்லாமல் கர்வ்வில் சேர்க்கப்படும் சில பிரீமியம் அம்சங்களையும் முன்னிலைப்படுத்துகின்றன. வரவிருக்கும் இந்த SUV-கூபேயின் டீஸர் படங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட கூடுதல் விவரங்கள் இதோ:

    பகிரப்பட்ட விவரங்கள் என்ன?

    நெக்ஸான் EV-இன் டாஷ்போர்டுடன் உள்ள ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இப்போது சமீபத்திய டீசரில் இருந்து அதன் கேபினின் மிகத் தெளிவான காட்சியை வழங்குகின்றன. இதன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் பனோரமிக் சன்ரூஃப் ஆகும். அதைத் தொடர்ந்து டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள். டேஷ்போர்டில் டூயல் ஸ்கிரீன்களுக்கான ஒருங்கிணைந்த செட்-அப் உள்ளது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டிற்கான 12.3-இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.

    கவனிக்கப்பட்ட பிற விவரங்களில் டூயல்-டோன் கேபின் தீம் மற்றும் ஏசி வென்ட்கள், சென்டர் கன்சோல், கியர் ஷிஃப்டர், டச்-பேஸ்டு ஆட்டோமேட்டிக் ஏசி கண்ட்ரோல், ஃப்ரன்ட் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் டிரைவ் மோட் செலக்டர் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் நெக்ஸான் EV-இலிருந்து பெறப்பட்டதாகத் தெரிகிறது. கூடுதலாக, முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள் மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் ஆகியவை காணப்பட்டன. 

    ஹாரியர் மற்றும் சஃபாரி மாடல்களில் இருந்து பெறப்பட்ட 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலையும் இந்த பிராண்டின் ஒளிரும் லோகோவைக் கொண்ட இந்த படங்கள் இன்றைய நவீன டாடா மாடல்களில் இருப்பதைப் போன்றே உள்ளன. 

    எதிர்பார்க்கப்படும் வசதிகள் மற்றும் பாதுகாப்பு

    பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பவர்டு டெயில்கேட் போன்றவை இதில் உள்ளன. டாடா கர்வ்வில் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டரிங் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற லெவல் 2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் பார்க்க: Tata Curvv மற்றும் Tata Curvv EV: இரண்டு கார்களின் வெளிப்புற வடிவமைப்பு ஒப்பீடு

    எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் 

    டாடா இதுவரை கர்வ் EV-க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை வெளியிடவில்லை. ஆனால் இது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா கர்வ் EV ஆனது வெஹிகிள்-டு-லோட் (V2L) மற்றும் வெஹிகிள்-டு-வெஹிகிள் (V2V) வசதிகளையும் கொண்டிருக்கும். 

    விலை மற்றும் போட்டியாளர்கள்

    டாடா கர்வ் EV -இன் விலை ரூ.20 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV மட்டுமில்லாமல் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் மாருதி eVX ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடும்.

    லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    samarth
    Samarth is an auto enthusiast who loves cars and has been passionate about them since childhood. He\'s a writer, video editor, and active social butterfly with over four years of experience in creating content as a freelancer. Samarth enjoys traveling and discovering new places, which complements his love for cars and fuels his creativity. மேலும் படிக்க

    Write your Comment on Tata கர்வ் EV

    மேலும் ஆராயுங்கள் on டாடா கர்வ் இவி

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • உபகமிங்
    • denza d9
      denza d9
      Rs.1 - 1.10 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • denza z9 ஜிடி
      denza z9 ஜிடி
      Rs.1.25 சிஆர்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • மஹிந்திரா தார் இ
      மஹிந்திரா தார் இ
      Rs.25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw chery icar v23
      jsw chery icar v23
      Rs.20 - 25 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    • jsw jaecoo j5 இவி
      jsw jaecoo j5 இவி
      Rs.20 லட்சம்estimated
      nov 2026 அறிமுக எதிர்பார்ப்பு
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience