• English
    • லாகின் / ரிஜிஸ்டர்

    புது டொயோட்டா ஃபார்ச்சூனர் -க்கு வெயிட்டிங்கா...? இப்படிதான் புது மாடல் இருக்கும்

    மீண்டும் சோதனையின் போது கேமராவில் சிக்கிய அடுத்த தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர்: ஸ்பை படங்களில் தெரிவது என்ன?

    ved
    ved
    modified on அக்டோபர் 21, 2026 20:15 ist
    info icon
    published onOct 21, 2026 19:15 IST
    last updated onOct 21, 2026 20:15 IST
    51 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    Toyota Fortuner

    டொயோட்டாவின் மிகவும் பிரபலமான SUV மாடலான ஃபார்ச்சூனர் 2016-ல் தற்போதைய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது புதிய மாற்றங்களைப் பெறத் தயாராகி வருகிறது. டெஸ்டிங் செய்யப்படும் போது படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த கார் விரைவில் வெளிவரவிருக்கும் மாடலைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை நமக்கு வழங்குகிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த புதிய கார், சமீபத்தில் புதிய தலைமுறை மாற்றத்தைப் பெற்ற ஹைலக்ஸ் மாடலின் பல அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட வாய்ப்புள்ளது. இதோ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விவரங்களும்:

    2027 டோயோட்டா ஃபார்ச்சூனர் ஸ்பை படங்களின் விவரங்கள்: என்னென்ன மாற்றங்கள் உள்ளன?

    தற்போதைய மாடலுடன் ஒப்பிடும்போது 2027 ஃபார்ச்சூனர் அதன் டிசைன் லாங்குவேஜில் மிகப்பெரிய மாற்றத்தைக் காணவுள்ளது. அதிக சதுர வடிவிலான சிலுவட் மற்றும் பாக்ஸியான எலிமென்ட்களை இது ஏற்றுக்கொண்டுள்ளது. ஃப்ரண்ட்டில், LED DRL-களுடன் கூடிய புதிய மெல்லிய LED ஹெட்லேம்ப் செட்டப்பை பெற்றுள்ளது. DRL-களை இணைக்கும் ஒரு மெல்லிய கிளாஸ் பிளாக் ஸ்டிரிப் மற்றும் நாம் ஹைலக்ஸ் -ல் பார்த்தது போல ரோட் பிரசன்ஸை அதிகரிக்கும் ‘ஹோனிகோம்ப்’ மெஷ் போன்ற டிசைன் கொண்ட பெரிய கிரில்லை உங்களால் பார்க்க முடியும். மேலும் ஹைலக்ஸ் போலவே இதிலும் லோகோவிற்கு பதிலாக கம்பீரமான ‘டொயோட்டா’ பேட்ஜிங் மாற்றப்படலாம்.

    Toyota Fortuner

    சைடு புரொஃபைலை பொறுத்தவரை இது மிகவும் நிமிர்ந்த A-பில்லரைப் பெற்றுள்ளது. இது இதன் கம்பீரமான ஆளுமையை மேலும் உயர்த்துகிறது. புதிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க்ஃபின் ஆண்டெனா மற்றும் பெரிய ORVM-களையும் இதில் எதிர்பார்க்கலாம்.

    Toyota Fortuner

    சமீபத்திய டிசைன் டிரெண்டை பின்பற்றி இதன் ரியர் புரொஃபைல் காரின் அகலம் முழுவதும் நீளும் கனெக்ட்டெட் LED டெயில்லேம்ப் செட்டப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இதன் டெயில்கேட்டும் தட்டையான மற்றும் சதுர வடிவ டிசைனைக் கொண்டுள்ளது. பம்பர் சிம்பிளான லுக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலைப் போல பல்கியான லுக்கைக் கொண்டிருக்கவில்லை.

    Toyota Fortuner

    அம்சங்கள் & பாதுகாப்பு

    அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் தனது அம்சங்கள் பட்டியலில் பெரிய அளவிலான அப்கிரேடைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பெரிய 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் Android Auto மற்றும் Apple CarPlay, சன்ரூஃப், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பவர்-அட்ஜஸ்டபிள் ஃப்ரண்ட் சீட்கள் போன்ற அம்சங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

    Toyota Fortuner

    *எடுத்துக்காட்டுக்காக தற்போதைய டோயோட்டா ஃபார்ச்சூனரின் படம்

    பாதுகாப்பு எக்யூப்மென்ட்கள் குறித்த விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், டொயோட்டா நிறுவனம் இதில் லெவல்-2 ADAS சூட், மல்டிபிள் ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, ஃப்ரண்ட் மற்றும் ரியர் பார்கிங் சென்சார்கள், ESC மற்றும் TPMS ஆகியவற்றை வழங்கும் என்று தெரிகிறது.

    பவர்டிரெயின்கள்

    இன்ஜினைப் பொறுத்தவரை இந்த SUV தற்போதைய காரில் வழங்கப்படும் அதே 2.8-லிட்டர் டீசல் இன்ஜினைப் பயன்படுத்தலாம். இருப்பினும் இதில் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வெர்ஷனும் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. தற்போதைய ஃபார்ச்சூனரின் 2.7-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் இதில் தொடருமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. தற்போதைய ஃபார்ச்சூனரின் விவரக்குறிப்புகள் இதோ:

    இன்ஜின்

    2.7-லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல்

    2.8-லிட்டர் டீசல்

    2.8-லிட்டர் டீசல் வித் மைல்டு-ஹைபிரிட்

    பவர்

    166 PS

    204 PS

    204 PS

    டார்க்

    245 Nm

    420 Nm (MT)/ 500 Nm (AT)

    500 Nm (AT)

    டிரான்ஸ்மிஷன்

    5-ஸ்பீடு MT

    6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT

    6-ஸ்பீடு MT/6-ஸ்பீடு AT

    டிரைவ்டிரெயின்

    RWD

    RWD/4WD

    4WD

    *MT- மேனுவல் டிரான்ஸ்மிஷன், AT- ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் (டார்க் கன்வெர்டர்), RWD- ரியர்-வீல் டிரைவ், 4WD- ஃபோர்-வீல் டிரைவ்

    Toyota Fortuner

    *எடுத்துக்காட்டுக்காக தற்போதைய டோயோட்டா ஃபார்ச்சூனரின் படம்

    ஃபார்ச்சூனர் பிராண்டின் ரக்டு மற்றும் டஃப்பான குணாதிசயங்களைக் கருத்தில் கொண்டு, புதிய ஃபார்ச்சூனரிலும் லோ-ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸ் கொண்ட விரிவான 4WD ஆப்ஷனை டொயோட்டா தொடர்ந்து வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அறிமுக தேதி, எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டிகள்

    2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குளோபல் அறிமுகம் திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இந்த புதிய ஃபார்ச்சூனர் 2027-ன் பிற்பகுதியில் இந்திய சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். இதன் ஆரம்ப விலை ரூ.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

    அடுத்த தலைமுறை ஃபார்ச்சூனர் MG மெஜஸ்டர் மாடலுக்கு நேரடியாகப் போட்டியிடும். அதே நேரத்தில் ஸ்கோடா கோடியாக், ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் மற்றும் கியா சொரெண்டோ போன்ற மோனோகாக் SUV மாடல்களுக்கு ஒரு நல்ல மாற்றாகவும் இருக்கும்.

    கார்தேக்கோவின் கருத்து...

    இன்னோவாவுக்குப் பிறகு டோயோட்டாவின் மிக வலிமையான மற்றும் ஐகானிக் பிராண்டான ஃபார்ச்சூனர், பல போட்டியாளர்கள் இதன் சந்தைப் பங்கைப் பிடிக்க முயன்றும் தோற்றுப்போன நிலையில் கார் தயாரிப்பாளரின் ஒரு தகர்க்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. ஒரு தசாப்தத்திற்குப் பிறகும், இந்த இரண்டாம் தலைமுறை எஸ்யூவி தனது தனித்துவமான வசீகரம், கரடுமுரடான கட்டமைப்பு மற்றும் பாறை போன்ற நம்பகத்தன்மையால் பலரின் கேரேஜ்களில் தொடர்ந்து இடம் பிடித்து வருகிறது. இந்த புதிய தலைமுறையின் மூலம், டோயோட்டா இந்த சூத்திரத்தை மேலும் மேம்படுத்தி, பழைய காலத்து அதே முரட்டுத்தனமான அழகோடு அதிக நவீனத்துவத்தை எதிர்பார்க்கும் புதிய தலைமுறை வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த எஸ்யூவியை நவீனமாக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

    Image Source- Kurdistan Automotive Blog

    was this article helpful ?

    ved
    Ved Kulkarni is a Correspondent with CarDekho Group, and an automotive journalist with over 5 years of experience under his belt covering cars, motorcycles, mobility solutions and everything in between. A Product Design graduate, he specialises in analysing market trends, testing cars, creating automotive content and gathering customer insights. His love for vehicles began early, and he has vast hands-on experience with everything from classic cars to imported exotics and even the regular mass market vehicles. His technical expertise, combined with a deep-rooted passion for all things automotive, helps give buyers holistic and knowledgeable advice. மேலும் படிக்க

    Write your Comment on Toyota ஃபார்ச்சூனர்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    கார் செய்திகள்

    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • உபகமிங்
    • பிரபலமானவை
    *ex-showroom <cityname> யில் உள்ள விலை
    ×
    we need your சிட்டி க்கு customize your experience